மும்பை: போதைப் பொருள் பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் நிரபராதி என நேற்று விடுவிக்கப்பட்டார்.
மும்பையின் கார்டெல்லா குரூஸ் கப்பலில் 2021 அக்டோபரில் நடந்த விருந்து நிகழ்ச்சியில், போதைப்பொருள் வைத்திருந்ததாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவால் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார். அவரோடு சேர்த்து 14 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது.
இவ்வழக்கில் ஆர்யன் கான் போதைப்பொருள் தொடர்பாக பெரிய அளவில் சதி எதிலும் ஈடுபடவில்லை என்றும் அனைத்துலக போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் அவருக்குத் தொடர்பில்லை என்றும் முன்னதாக நடத்திய விசா ரணையில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், போதுமான ஆதாரங்கள் இல்லையெனக் கூறி ஆர்யன் உள்பட ஆறு பேர் மீதான வழக்கை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு கைவிட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தகவல் கூறியுள்ளது.

