ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே கடல்பாசி சேகரிக்கச் சென்ற 45 வயது மீனவப் பெண்ணை, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, உயிரோடு எரித்துக் கொன்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் இறால் பண்ணையில் வேலை பார்க்கும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஆறு வட மாநிலத்தவர்களை ராேமஸ்வரம் நகர காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், இரு இளையர்கள் பெண்ணைக் கொலை செய்தது உறுதியாகி உள்ளது.
இதையடுத்து, ஒடிசாவைச் சேர்ந்த பிரகாஷ், ரஞ்சன் ராணா ஆகிய இரு இளையர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மற்ற நான்கு இளையர்களுக்கு இந்தச் சம்பவத்தில் தொடர்பு இல்லை என்பதால், அவர்கள் விடு விக்கப்படுவார்கள் எனவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மீனவப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த இரு இளை யர்களும் அவர் அணிந்திருந்த நகைகளைத் திருடி விற்க முயற்சி செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, இவர்களைச் சம்பவ இடத்திற்கு நேரில் அழைத் துச் சென்று காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக மீனவப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்ததைக் கண்டித்து ராமேஸ்வரம், வடகாடு மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், பெயர் குறிப்பிடா மல் 200 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் அருகே வடகாடு மீனவக் கிராமத்தைச் சேர்ந்த சந்திரா என்ற 45 வயதுப் பெண் கடந்த 23ஆம் தேதி கடல்பாசியை சேகரிக்கச் சென்றுள்ளார். கடல்பாசி யைச் சேகரித்து விற்று, அதில் கிடைக்கும் வருமானத்தில் சந்திரா தனது குடும்பத்தை நடத்தி வந்து உள்ளார். இந்நிலையில், சந்திரா மாலை நேரமாகியும் வீடு திரும்பாத தால் காவல்நிலையத்தில் அவரது கணவர் புகார் அளித்தார்.

