சென்னை: ெசன்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த பாலச்சந்தரை, 30, கடந்த 24ஆம் தேதி ஒரு கும்பல் கொன்று விட்டு தப்பிவிட்டது.
பாலச்சந்தர், பாஜகவின் மத்திய சென்னை மாவட்ட அணியின் தலைவராகப் பொறுப்பு வகித்தவர். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் குற்றவாளிகள் நால்வரை தனிப்படை காவலர்கள் கைது செய்தனர்.
கைதான சகோதரர்கள் பிரதீப், சஞ்சய் ஆகியோர் அளித்துள்ள வாக்கு மூலத்தில், "பாலச்சந்தரும் நாங்களும் நல்ல நண்பர்க ளாக இருந்தோம். ஆனால், அவர் பாஜகவில் சேர்ந்த பிறகு மிகவும் மாறிவிட்டார். எங்களையும் என் அப்பாவை யும் சிறைக்கு அனுப்பினார். அவர் உயிரோடு இருக்கும் வரை எங்களை வாழவிட மாட்டார் என்பதால் கொன்று விட்டோம்," என்றனர்.

