'எந்­தச் சூழ­லி­லும் குற்­றங்­கள் உரு­வா­கக்­கூ­டாது'

'எந்­தச் சூழ­லி­லும் குற்­றங்­கள் உரு­வா­கக்­கூ­டாது'

1 mins read
139678ac-c4be-4031-a140-7415e246b711
-

சென்னை: தமி­ழ­கத்­தில் எந்­தச் சூழ்­நி­லை­யி­லும் குற்­றங்­கள் உரு­வா­காத நிலையை ஏற்­ப­டுத்­த­வேண்­டும் என காவல்­து­றை­யி­ன­ருக்கு முதல்­வர் ஸ்டா­லின் அறி­வு­றுத்தி உள்­ளார்.

சென்னை எழும்­பூர் ராஜ­ரத்­தி­னம் விளை­யாட்டு அரங்­கத்­தில் காவல்­து­றை­யி­ன­ருக்கு பதக்­கங்­கள் வழங்கி, பாராட்­டிப் பேசிய முதல்­வர், "காவல்­து­றை­யி­னர் மக்­க­ளோடு நெருக்­க­மாக இருந்­தால்­தான் நாட்­டில் குற்­றங்­கள் குறை­யும்," என்று கூறி­னார்.

எனவே, காவல்­துறை நமது நண்­பன் என்று சொல்­லத்­தக்க விதத்­தில் காவ­லர்­கள் செயல்­ப­ட­வேண்­டும் என்று அவர் கேட்­டுக்­கொண்­டார். அமை­தி­யான சூழ்­நி­லை­யில்­தான் தொழில் வளர்ச்சி ஏற்­படும் என்­றும் தமி­ழ­கம் அமை­திப் பூங்­கா­வாக இருப்­ப­தால்­தான் தொழில்­து­றை­யி­னர் வரு­வ­தா­க­வும் முதல்­வர் தெரிவித்தார்.