இந்­தி­யா­வில் மிகப்­பெ­ரிய தங்­கச் சங்­கி­லி­யு­டன் நட­மா­டும் நகைக்­க­டை­யாக வரிச்­சூர் செல்­வம்

இந்­தி­யா­வில் மிகப்­பெ­ரிய தங்­கச் சங்­கி­லி­யு­டன் நட­மா­டும் நகைக்­க­டை­யாக வரிச்­சூர் செல்­வம்

1 mins read
7844527a-de2a-4a5a-9508-4eb5420ef63d
-

மதுரை: இந்­தி­யா­வின் மிகப்­பெ­ரிய தங்­கச் சங்­கி­லியை வாங்­கி­யுள்­ளார் வரிச்­சூர் செல்­வம் (படம்). நகைக்­கடை­யில் அந்த நகையை ஆர்­டர் செய்து வாங்­கி­ய­வர், அதை அங்­கேயே அணிந்து மகிழ்ந்­தார்.

மதுரை மாவட்­டம், வரிச்­சூர் கிரா­மத்­தைச் சேர்ந்­த­வர் செல்­வம். இவர் மீது கட்­டப்­பஞ்­சா­யத்து உள்­ளிட்ட வழக்­கு­கள் இருந்த நிலை யில், இப்­போது ரவு­டித்­த­னத்­தில் இருந்து ஒதுங்கி அமைதி காத்து வரு­கி­றார்.

நட­மா­டும் நகைக்­கடை என வர்­ணிக்­கப்­படும் இவர், தற்­போது வட்­டிக்கு விடும் தொழி­லை­யும் சொத்து முக­வர் ெதாழி­லை­யும் செய்து வரு­கி­றார்.

ெகாரோனா காலத்­தி­லும் கூட 10 பவு­னில் தங்க முகக் கவ­சத்தை அணிந்­து­கொண்டு வலம் வந்­தார்.

இப்­போது முறுக்கு சங்­கிலி போல் அவர் அணிந்­துள்ள 100 பவுன் கழுத்­த­ணியை இரு­வர் சேர்ந்­து­தான் அணி­விக்க முடியுமாம். இந்­தி­யா­வி­லேயே அதி­க­பட்­ச­மான நகையை அணிந்­த­வர் என்ற பெரு­மை­யும் இவ­ருக்­குக் கிடைத்­துள்­ளது. 'கேங்'கோடு சென்­றால்­தான் ரவுடி, தான் எப்­போ­தும் தனித்தே செல்­வ­தால் ரவுடி இல்லை என்­றும் வாதம் செய்­கி­றார்.