சென்னை: தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கையை ஒருபோதும் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று அமைச்சர் பொன்முடி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
விரைவில் மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கப்படும் எனவும் அவர் உறுதி கூறியுள்ளார்.
தேசிய கல்வி கொள்கை சுமூகமாக நிறைவேற்றப்படும் என்று தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ேதசிய கல்விக் ெகாள்கையைச் செயல்படுத்தினால் நாடு வளர்ச்சிப் பாதையில் செயல்படும் என்றும் ஆளுநர் கூறினார்.
திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேசிய கல்விக் கொள்கை அமலாக்கம் குறித்த கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய அவர், "மக்களுக்கு நன்மை பயக்கும் பல்வேறு திட்டங்கள் நடைமுறைக்கு கொண்டுவரப்படுவதாகவும் அதனை சரியாகப் புரிந்துெகாண்டு செயல்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்," என்றும் ஆளுநர் தெரிவித்தார். எல்லாவற்றிலும் கருத்து வேறுபாடுகள் என்பது நாட்டின் வளர்ச்சிக்கே தடை ஏற்படுத்தும் என்றும் அவர் சொன்னார்.
தொலைநோக்குப் பார்வையோடு உருவாக்கப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கை நம்முடைய அடையாளங்களை தெரிந்துகொள்ள பயன்படும் என்றார் ஆளுநர்.

