ரூபாலி யானையை போராடி மீட்ட வனத்­துறை

ரூபாலி யானையை போராடி மீட்ட வனத்­துறை

2 mins read
ce10e1b8-7c13-47cc-ae93-943f7e5eeeac
-

திருச்சி: மது­ரை­யில் மாலா என்­பவர் உரிய ஆவ­ணங்­கள் இன்றி வளர்த்து வந்த பெண் யானையை வனத்­துறை அதி­கா­ரி­கள் பறி­மு­தல் செய்து அதனை திருச்­சி­யில் உள்ள யானை­கள் மறு­வாழ்வு மையத்­திற்கு அனுப்பி வைத்­த­னர்.

மதுரை மாவட்­டம், தல்­லா­கு­ளம் பகு­தி­யில் உள்ள கமலா நக­ரைச் சேர்ந்­த­வர் மாலா. இவர், கடந்த மூன்று ஆண்­டு­க­ளுக்கு முன்பு பீகா­ரில் இருந்து 22 வய­து­டைய ரூபாலி என்ற பெண் யானையை வாங்கி வளர்த்து வந்­துள்­ளார்.

இந்­நி­லை­யில், இவர் முறை­யான அனு­ம­தி­யும் ஆவ­ணங்­களும் இல்­லா­மல் யானையை வளர்த்து வருவ தாக மதுரை மாவட்ட வனத்­து­றை­யி­ன­ருக்­குப் புகார் வந்­தது.

அத்­து­டன், யானையை முறை யாகப் பரா­ம­ரிக்­கா­மல் திரு­வி­ழாக்­கள், கோயில்­க­ளுக்கு அனுப்பி அதன்­மூ­லம் மாலா பணம் சம்பா தித்து வரு­வ­தா­க­வும் குற்­றம்­சாட்­டப் பட்­டது.

இதை­ய­டுத்து, ரூபாலி உரிய பரா­ம­ரிப்பு இல்­லா­மல் இருப்­ப­தைக் கருத்­தில்­கொண்டு வன­வி­லங்­குப் பாது­காப்­புச் சட்­டத்­தின்­கீழ், யானையை மீட்டு திருச்­சி­யில் உள்ள யானைகள் மீட்பு, மறு­வாழ்வு மையத்­திற்கு அழைத்­துச் செல்ல வன அதி­கா­ரி­களும் காவல்­து­றை­யி­ன­ரும் வந்­தி­ருந்­த­னர்.

ஆனால், உடல்­ந­லக் குறைவு கார­ண­மாக மருத்­து­வச் சிகிச்சை பெற்று வரும் யானையை வேறு இடத்­திற்கு மாற்­றக்­கூ­டாது என்ற விதி­மு­றையை வனத்­து­றை­யி­னர் மீறு­வ­தா­கக் கூறி மாலா வாக்­கு­வா­தம் செய்­தார்.

நான்கு ஆண்­டு­க­ளாக தான் வளர்ந்து வந்த இடத்தை விட்டு பிரிந்து செல்ல விரும்­பாத ரூபாலி, அங்­கி­ருந்து செல்ல அடம்­பி­டித்­தது.

யானை­கள் மறு­வாழ்வு மையத்­தில் ஏற்­கெ­னவே மலாத்தி, சந்­தியா, ஜெயந்தி, கோமதி, ஜமிலா, இந்து, ரோகினி, இந்­திரா என்ற யானை­கள் பரா­ம­ரிக்­கப்­பட்டு வரும் நிலை­யில், தற்­போது ரூபா­லி­யும் ேசர்ந்­துள்­ள­தால் மொத்­தம் ஒன்­பது யானை­களை திருச்சி வனத்­து­றை­யி­னர் பரா­ம­ரித்து வரு­கின்­ற­னர்.

மோச­மான முறை­யில் பரா­ம­ரிக்­கப்­பட்ட ரூபாலி யானை மது­ரை­யில் இருந்து இட­மாற்­றம் செய்­யப்­பட்­டது. திருச்சி அருகே உள்ள எம்.ஆர். பாளை­யத்­தில் உள்ள யானை­கள் மீட்பு, மறு­வாழ்வு மையத்­தில் 22 வயது ரூபாலி புதி­தாக சேர்க்­கப்­பட்­டது.

படம்: இந்து ஊட­கம்