செய்­திக்­கொத்து

செய்­திக்­கொத்து

2 mins read
fd259e61-e148-4a25-906e-3bc6705df5be
-

பல நூற்றாண்­டு­க­ளுக்­குப் பிறகு

மது­ரை­யில் வசந்த விழா

மதுரை: உல­கப் பிர­சித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்­த­ரே­சு­வரா் கோயி­லில் பல நூற்­றாண்­டு­க­ளுக்­குப் பிறகு வரு­கிற ஜூன் 3ஆம் தேதி வசந்­த­விழா உற்­ச­வம் நடை­பெ­ற­வுள்­ளது.

இவ்­வி­ழா­வைச் சிறப்­பாக நடத்­து­வ­தற்­காக, புது மண்­ட­பத்­தைச் சுற்­றி­லும் தண்­ணீர் நிரப்பி வைப்­ப­தற்­காக படிக்­கட்­டு­களை உடைக்­கும் பணி நடை­பெற்­றது. ஆனால், அங்­கி­ருக்­கும் 22 கடைக்­கா­ரர்­கள் மட்­டும் கடை­க­ளைக் காலி செய்ய மறுத்­து­விட்­ட­னர்.

அதன்­பின்­னர், கோயில் நிர்­வா­கத்­தி­ன­ரும் கடைக்­கா­ரர்­களும் பேச்­சு­வார்த்தை நடத்தி மண்­ட­பத்­தைச் சுற்­றி­லும் தண்­ணீர் செல்ல தடை­யாக உள்ள இடத்தை மட்­டும் காவல்­து­றை­யி­னர் உத­வி­யு­டன் கோயில் பணி­யா­ளர்­கள் இடித்­த­னர்.

புது மண்­ட­பத்­தில் எழுந்­த­ரு­ளும் சுவா­மிக்கு வெப்­பத்­தைத் தணிக்க அந்த மண்­ட­பத்­தைச் சுற்­றி­லும் தண்­ணீர் நிரப்­பு­வதற்­காக இருக்கும் சிறிய அகழியைச் சீர­மைக்­கும் பணி நடை­பெற்று வரு­கிறது.

முடி­வுற்­றது கத்­திரி வெயில்

சென்னை: இம்­மா­தம் 4ஆம் தேதி அக்னி நட்­சத்­தி­ரம் தொடங்­கி­யது முதலே மக்­களை வெயில் வாட்டி வதைத்­தது. நேற்­று­டன் இந்த கத்­திரி வெயில் தமி­ழ­கத்­தில் முடி­வுற்­றது. பர­வ­லாக பெய்த மழை­யால் வெப்­பம் தணிந்து இத­மான சூழல் நில­வு­கிறது. வெப்­பச்­ச­ல­னம் கார­ண­மாக தமிழ்­நாட்­டில் அடுத்த ஐந்து நாள்­க­ளுக்கு இடி மின்­ன­லு­டன் மித­மான மழை நீடிக்­கும். சென்­னை­யில் மேக­மூட்­ட­மா­கக் காணப்­படும், மழை பெய்­ய­வும் வாய்ப்­புண்டு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி­வித்­துள்­ளது.

யானை தாக்கி இரு­வர் பலி

ஊட்டி: நீல­கிரி மாவட்­டம், கூட­லூர் அருகே காட்டு யானை தாக்கி அடுத்­த­டுத்து இரு­வர் உயி­ரி­ழந்­த­தால் அங்கு வசிக்­கும் மக்­கள் அதிர்ச்சி அடைந்­த­னர். இதை­ய­டுத்து, உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் உடல்­களை மீட்­ப­தற்­காக வந்த வனத்­து­றை­யி­னரை உடலை எடுக்­க­வி­டா­மல் தடுத்து போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். "நாங்­கள் வசிக்­கும் பகு­தி­யில் கடந்த சில நாள்­க­ளா­கவே யானை நட­மாட்­டம் அதி­க­ரித்­துள்­ளது. நேற்று முன்­தி­னம் தேநீர் கடைக்­கா­ரர் ஆனந்­த­கு­மார் உயி­ரி­ழந்­தார். அதன்­பின்­னர், யானை தாக்கி பெண் ஒரு­வர் உயி­ரி­ழந்து உள்­ளார். அடுத்­த­டுத்து இரு­வர் உயி­ரி­ழந்­துள்­ள­தால் வீட்டை விட்டு வெளி­யில் வரவே எங்­க­ளுக்கு அச்­ச­மாக உள்­ளது. இங்கு சுற்­றித் திரி­யும் யானையை கும்கி யானை­கள் உத­வி­யு­டன் அடர்ந்த வனத்­திற்­குள் விரட்­ட­வேண்­டும்," என கோரிக்கை விடுத்­த­னர்.

பழ­னி­யில் நாண­யக் கண்­காட்சி

பழனி: பழ­னி­யில் தேசிய அள­வி­லான பழைய நாண­யங்­க­ளின் கண்­காட்சி நடை­பெற்று வரு­கிறது. இரண்­டா­யி­ரம் ஆண்­டு­கள் பழ­மை­வாய்ந்த நாண­யங்­கள் கண்­காட்­சி­யில் சேர, சோழ, பாண்­டிய மன்­னர்­கள் கால நாண­யங்­கள், மற்­றும் முக­லா­யர், பிரிட்­டிஷ், விக்­டோ­ரியா காலத்து நாண­யங்­களும், சுதந்­திர இந்­தி­யா­வின் நாண­யங்­கள், ரூபாய் நோட்­டு­கள் வரை இந்தக் கண்­காட்­சி­யில் இடம்­பெற்­றுள்­ளன.