உள்ளாட்சி அமைப்பு சீர்குலைப்பு: அதிமுக புகார்

உள்ளாட்சி அமைப்பு சீர்குலைப்பு: அதிமுக புகார்

1 mins read
7b594d0e-a138-4c0d-9596-8115f19d701f
-

சென்னை: திமுக அரசு

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளைச் சீர்குலைக் கும் வகையில் செயல்படு வதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எனவே திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

உள்ளாட்சியில் நல்லாட்சி என்று மாய் மாலம், செப்படி வித்தை காட்டும் திமுக அரசு உள்ளாட்சிகளின் மாண்பைச் சீர்குலைப்பதாகவும் உள்ளாட்சி ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கும் வகையில் செயல்படுவதாக வும் அறிக்கை ஒன்றில் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

"இது வெட்கக்கேடான செயல்பாடாகும். உள்ளாட்சி அமைப்புகளில் சட்டபூர்வமாக, நேர்மையாக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றி வரும் அதிமுக நிர்வாகிகளையும் உறுப்பினர்களையும் செயல்படவிடாமல் தனது 'ஆக்டோபஸ்' கரங்களால் நசுக்குகிறது திமுக அரசு," என பழனிசாமி சாடி உள்ளார்.

ஒருசில அதிகாரிகளின் துணையுடன் இவை எல்லாம் நடப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அரசின் செயல்பாடு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

"உள்ளாட்சியில் நல்லாட்சி தருகிறீர்களோ இல்லையோ, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப் பட்ட எதிர்க்கட்சியினரை செயல்படவிடாமல் தடுத்தால், அதற்கான விலையை விரைவில் தர நேரிடும் என்று ஆட்சியாளர்களை எச்சரிக்கிறேன்," என்று பழனிசாமி கூறியுள்ளார்.