ஒரு பெட்டி தக்காளி திருடியவர் கைது; முன்பு ஒரு பெட்டி ஆப்பிள் திருடி கைதானவர்

ஒரு பெட்டி தக்காளி திருடியவர் கைது; முன்பு ஒரு பெட்டி ஆப்பிள் திருடி கைதானவர்

1 mins read
56d39ff0-bdbf-478d-b3d9-5c4e4198f572
-

சேலம்: ஒரு பெட்டி தக்­கா­ளியைத் திரு­டிய இளை­யரை சேலம் காவல்­துறை­யி­னர் கைது செய்­த­னர். விசா­ர­ணை­யின்­போது தாம் ஏற்­கெ­னவே ஆப்­பிள் திரு­டிய குற்­றத்­துக்­காக கைதான தக­வலை அவர் தெரி­வித்­துள்­ளார்.

அண்­மைய சில வாரங்­க­ளாக தமி­ழகத்­தின் பல்­வேறு பகு­தி­களில் தக்­கா­ளி­யின் விலை கிடு­கிடு உயர்வு கண்­டது. ஒரு கிலோ தக்­காளி நூறு ரூபாய்க்­கும் அதி­க­மாக விற்­கப்­பட்­டது.

இப்­போ­தெல்­லாம் பெட்­ரோல், ஆப்­பிள், தக்­காளி என்று எந்­தப் பொரு­ளின் விலை அதி­க­மாக உள்­ளதோ அதை திரு­டு­வது அதி­க­ரித்­துள்­ளது. அந்த வகை­யில் சேலம் மாவட்­டம், பெரு­மா­க­வுண்­டம்­பட்­டி­யைச் சேர்ந்த 32 வய­தான சின்­ராஜ் (படம்) என்­ப­வர் பல காய்­க­றிக் கடை­களில் இருந்து தக்­கா­ளியைத் திரு­டி­யுள்­ளார்.

கடந்த சில தினங்­க­ளாக பெரு­மா­க­வுண்­டம்­பட்டி, புது­ரோடு உள்­ளிட்ட சேலத்­தின் பல்­வேறு பகு­தி­களில் தக்­காளி அதிக அள­வில் திருட்டுப் போனது. இது தொடர்­பான புகார்­களை காவல்­து­றை­யி­னர் விசா­ரித்து வந்­த­னர். கண்­கா­ணிப்புக் கேமராக்­களில் பதி­வான காட்­சி­களை ஆய்வு செய்­த­போது, இளை­யர் ஒருவர் நன்கு உடை­ய­ணிந்து, இரு­சக்­கர வாகனம் ஒன்­றில் வரு­வ­தும் காய்­க­றிக் கடை­க­ளுக்கு வெளியே வைக்­கப்­பட்­டுள்ள தக்­கா­ளிப் பெட்­டி­களை வாக­னத்­தில் ஏற்­றிச் செல்­லும் காட்­சி­களும் பதி­வாகி இருந்­தன. அந்த வாக­னத்­தின் பதி­வெண்­களைக் கொண்டு சின்­ராஜை பிடித்­த­னர்.

இவர் ஏற்­கெ­னவே ஆப்­பிள் பெட்­டி­யைத் திரு­டிய வழக்­கில் கைதாகி உள்­ளார். அண்­மை­யில் பிணை பெற்று வெளியே வந்­த­வர், மீண்­டும் திருட்டு வழக்­கிற்­காக பிடி­பட்­டுள்­ளார்.