ஆசிரமத்தில் பாலியல் தொல்லை, கஞ்சா விற்பனை நடப்பதாக புகார்

ஆசிரமத்தில் பாலியல் தொல்லை, கஞ்சா விற்பனை நடப்பதாக புகார்

2 mins read
7494a1b9-59a3-4a07-8e0d-39265cc58308
ஊடகங்களுக்கு தனது குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளித்த சுனிதா திமே கௌடா­ (நடுவில்). படம்: தமிழக ஊடகம் -

திரு­வண்­ணா­மலை: திரு­வண்ணா மலை­யில் செயல்­பட்டு வரும் புகழ்­பெற்ற ரமண மகி­ரிஷி ஆசி­ர­மத்­தில் பெண் பக்­தர்­கள், பணி­யா­ளர்­களுக்குப் பாலி­யல் தொல்லை கொடுக்­கப்­ப­டு­வ­தாக காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

கஞ்சா விற்­பனை, பாலி­யல் வன்ெகாடுமை என மற்­றொரு நித்­தி­யா­னந்தா ஆசி­ர­ம­மாக ரம­ணர் ஆசி­ர­மம் உரு­வெ­டுத்து வரு­வ­தாகவும் கர்­நா­ட­கா­வைச் சேர்ந்த சுனிதா திமே கௌடா என்ற பெண் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆசி­ரம நிர்­வா­கி­கள் சிலர் கஞ்சா பயன்­ப­டுத்­து­வ­தோடு அதனை ஆசி­ர­மத்­துக்கு வரு­ப­வர் களுக்கு விற்­ப­தா­க­வும் அவர் ஊடகத்துக்கு அளித்துள்ள நேர் காணலில் தெரிவித்தார்.

திரு­வண்­ணா­ம­லை­யில் ஏறக்­குறைய 75 ஆண்­டு­க­ளாகச் செயல்­பட்டு வரு­கிறது ஸ்ரீ ரமண மகி­ரிஷி ஆசி­ர­மம். இந்த ஆசிரமத்துக்கு வெளிநாடு­களில் இருந்து ஏரா­ள­மான பக்­தர்­கள் வரு­வது வழக்­கம்.

இதேேபால், பெங்­களூர் பச­வ­ன­குடி­யைச் சேர்ந்த தொழி­ல­தி­பர் அஷோக் ஷங்­கும் அவ­ரது மனைவி சுனிதா திமே கௌடா­வும் கடந்த 20 ஆண்­டு­களா­க பக்தர்களாக இங்கு வந்து செல்கின்­ற­னர்.

ஆசி­ர­ம நிர்­வா­கி­கள் வேண்டு கோளின்படி, பல லட்­சம் ரூபாய் செல­வில் பக்­தர்­க­ளுக்கு அன்­ன­தா­ன­மும் வழங்கி வரு­கின்­றனர்.

இந்­நி­லை­யில், ஆசி­ர­ம ஊழிய ரும் காவலரும்கூட தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக சுனிதா குற்றம்சாட்டியுள்ளார்.

"பல பெண்­கள் இது­பற்றி பேச பயப்­ப­டு­கின்­ற­னர். ஏனெ­னில் ஆசி­ர­மத்­தில் ரவு­டி­க­ளின் ஆதிக்கம் அதி­கம் உள்­ளது. அத­னால் குற்­றச்செயல்­கள் வெளியில் தெரியாமல் உள்ளன," என்றார்.

ஆசி­ர­மத்­தி­ல் பாலி­யல் தொல்­லை­களும் வன்­கொ­டுமை சம்­ப­வங்­களும் அரங்­கே­று­வதை அடுத்து, ஆசிரம நிர்­வா­கி­கள் சிவ­தாஸ் கிருஷ்­ணன், ஜெயந்தி பிரேம்­கு­மார், சத்­தி­ய­மூர்த்தி, வெங்­கட், பிரேம்­கு­மார், ஜெய­கு­மார் ஆகி­யோர் மீது நட­வடிக்கை எடுக்­கவேண்­டும் என்றும் சுனிதா அளித்துள்ள புகா ரில் கேட்­டுக்­கொண்­டுள்ளார்.

"ஒரு நேர்­மை­யான பெண் காவல் அதி­கா­ரியை நிய­மித்து விசா­ர­ணை­கள் செய்­தால் பல பாலி­யல் கொடு­மை­கள் வெளிச்சத்துக்கு வ­ரும்," என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், சுனிதாவின் புகார் குறித்து திரு­வண்­ணா­மலை நகர காவல்­துறை­யி­னர் விசா­ரணை நடத்­தி­ வருவதாக நியூஸ் தமிழ் தொலைக்­காட்சி தக­வல் தெரி­வித்­துள்ளது.