100 பேரின் வங்கிக் கணக்கில் தலா ரூ.13 கோடி பண மழை

சென்னை: தனி­யார் வங்­கி­யான ஹெச்­டி­எ­ஃப்­சி­யில் கணக்கு வைத்­தி­ருப்­ப­வர்­கள் கடந்த ஞாயிறன்று பெரும் கோடீஸ்­வ­ரர்­க­ளாக சற்று நேரத்­துக்கு மகிழ்ச்சி ெவள்­ளத்­தில் மிதந்­த­னர்.

சென்னை தியா­க­ராய நக­ரில் உள்ள எச்­டி­எ­ஃப்சி வங்கி தனது வாடிக்­கை­யா­ளர்­கள் 100 பேரின் வங்­கிக் கணக்­கில் தலா 13 கோடி ரூபாய் என மொத்­தம் 1,300 கோடி ரூபாய் வரவு வைத்­துள்­ள­தாக குறுஞ்­செய்தி அனுப்­பி­யது.

இதைக்­கண்டு வாடிக்­கையா ளர்­கள் பல­ரும் இன்ப அதிர்ச்சி அடைந்­த­னர்.

இதே­போல், இன்­னும் பல வாடிக் கையா­ளர்­க­ளின் கணக்­கி­லும் ரூ.10,000 முதல் லட்­சம் ரூபாய் வரை வரவு வைத்­துள்­ள­தா­க­வும் குறுஞ்­செய்­தி­கள் வந்­தன.

இதை­ய­றிந்த வங்கி நிர்­வாக அதி­கா­ரி­கள், உட­ன­டி­யாக பணம் போடப்­பட்ட வாடிக்­கை­யா­ளர்­க­ளின் வங்­கிக் கணக்கை தற்­கா­லி­க­மாக முடக்கி விசா­ரணை நடத்­தி­னர்.

அப்­போது, தொழில்­நுட்­பக் கோளாறு கார­ண­மாக பணம் தவ­று­த­லாக வரவு வைக்­கப்­பட்­டது தெரி­ய­வந்­தது. வங்கி சர்­வ­ரில் புதிய மென்­பொ­ருளை நிறு­வி­யதே குள­று­ப­டிக்கு கார­ணம் என­வும் அதி­கா­ரி­கள் விளக்­க­ம­ளித்­த­னர்.

ஹெச்­டி­எப்­ஃசி வங்­கி­யின் பெசன்ட் நகர் கிளை­யில் கணக்கு வைத்­தி­ருக்­கும் வி சஞ்­சீவி என்­ப­வர், அவ­ரது வங்­கிக் கணக்கில் திடீ­ரென ரூ.3.1 கோடி டெபா­சிட் செய்­யப்­பட்­ட­தாக பகிர்ந்­தி­ருந்­தார். பின்­னர், அவரது வங்­கிக் கணக்கு முடக்­கப்பட்டு சீரா­ன­தா­கக் குறிப்­பிட்­டார். இந்­நி­லை­யில், ஞாயி­றன்று முடக்­கப்­பட்ட ஒரு சிலரது வங்கிக் கணக்­கு­கள் நேற்று விடு­விக்­கப்­பட்­டதாக வங்கி நிர்வாகம் கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!