முதல்முறையாக சாதி மதம் குறிப்பிடாமல் சான்றிதழ்

முதல்முறையாக சாதி மதம் குறிப்பிடாமல் சான்றிதழ்

1 mins read
26681154-8069-46d9-aaa2-53865525d177
மூன்­றரை வயது மகளுடன் பெற்றோர். படம்: தமிழக ஊடகம் -

கோவை: கோவை மாவட்­டத்­தில் முதல்­மு­றை­யாக ஒரு குழந்­தைக்கு சாதி, மதம் இல்லை என்ற சான்­றி­தழ் வழங்­கப்­பட்டுள்ளது.

கோவை, கே.கே.புதூர் பகுதி யைச் சேர்ந்­த­வர் நரேஷ் கார்த்­திக், 33. இவர் தனது மூன்­றரை வயது மகளை எல்­கேஜி வகுப்­பில் சேர்ப்­ப­தற்­கா­கப் பல்­வேறு பள்­ளி­களையும் நாடி­னார். ஆனால், விண்­ணப்­பத்­தில் சாதி மதம் குறிப்­பி­டா­த­தால் பள்­ளி­களில் சேர்த்துக் கொள்ள மறுத்­து­விட்­ட­னர்.

இதுகுறித்து நரேஷ் கூறி­ய­போது, "பெற்­றோர் தங்­களது குழந் தைகளின் சாதி, மதம் குறித்து குறிப்­பி­டத் தேவை­யில்லை என 1973ஆம் ஆண்டு தமி­ழக அரசு அர­சாணை வெளி­யிட்­டுள்­ளது. இது­கு­றித்து பல பள்­ளி­க­ளுக்­கும் தெரி­யா­மல் இருப்பது­தான் வேத­னைக்­கு­ரிய விஷ­யம். கோவை ஆட்­சி­யரை தொடர்புகொண்­ட­ பின்­னரே குழந்­தைக்கு சான்­றி­தழ் கிடைத்­துள்ளது. எனது குழந்­தைக்கு வருங்­கா­லத்­தில் சாதி ரீதி­யான இட­ஒ­துக்­கீடு உள்­ளிட்ட எந்த சலுகையும் கேட்கமாட்டேன்," என உறுதி அளித்­துள்­ளேன்.

"புதிய நடை­முறை என்­ப­தால் சான்­றி­தழ் கிடைக்க கால­தா­ம­தம் ஏற்­பட்­டது. இனி­மேல் இந்தச் சான்­றி­தழ் எளி­தில் கிடைக்­கும்," என்று அவர் கூறி­னார்.