ஆசிய பளுதூக்கும் போட்டியில் 75 வயது முதியவர்

ஆசிய பளுதூக்கும் போட்டியில் 75 வயது முதியவர்

1 mins read
c5e460fe-7bc9-4a90-ba59-35b93a6725a5
தான் வென்ற பதக்கங்களுடன் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த வீரர் வீரையன். படம்: ஊடகம் -

மதுரை: மதுரை கரிமேடு பகுதியில் உள்ள உடற்பயிற்சி மையத்தில் தற்போதும் பளுதூக்கும் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் 75 வயது முதியவர் வீரையன்.

ஆசிய பளுதூக்கும் போட்டிக்குத் தேர்வாகியும் வறுமை காரணமாக தன்னால் கலந்துகொள்ள முடியாத சூழலில் இருப்பதால், அரசு நிதியுதவி செய்யவேண்டும் என கோரியுள்ளார். ஆசிய அளவிலான போட்டியில் கலந்துகொள்ள ரூ.70,000 நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும். தற்போது ரூ.10,000ஐ முன்பணமாகச் செலுத்தி தனது பெயரைப் பதிவு செய்துள்ளார் வீரையன்.