250 கிலோ பைக்கை 201 முறை வயிற்றில் ஏறவிட்ட கராத்தே வீரர்

250 கிலோ பைக்கை 201 முறை வயிற்றில் ஏறவிட்ட கராத்தே வீரர்

1 mins read
86a7aff0-6fd2-44c5-8a3a-65602763ea08
-

திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர் அப்துல் வகாப். இவர் கடந்த 15 வருடங்களாக கராத்தேயில் அனைத்துலகப் பயிற்சி யாளராக உள்ளார். சுத்தமல்லி, பேட்டை, டவுன் பகுதிகளில் கராத்தே பயிற்சிப் பள்ளியும் நடத்தி வருகிறார். 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் இவரிடம் கராத்தே பயின்று வருகின்றனர். .இந்நிலையில், தரையில் படுத்துக் கொண்டு தன் வயிற்றில் 201 முறை 250 கிலோ எடை கொண்ட இருசக்கர வாகனத்தை ஏற்றி இறக்கும் உலகச் சாதனை நிகழ்ச்சியை நடத்தினார். இது சாதனைதான் என்றாலும் வயிற்றில் வாகனம் ஏறி இறங்குவதைப் பார்க்க சிலர் சங்கடப்பட்டனர். பலரும் அவரை உற்சாகப்படுத்தினர். படம்: ஊடகம்