மாணவர்கள் சேர்க்கையைக் கூட்ட மின்விசிறி இலவசம்

மாணவர்கள் சேர்க்கையைக் கூட்ட மின்விசிறி இலவசம்

1 mins read
788168e1-d70c-4f85-ac94-077139eee74c
-

சென்னை: அரசு தொடக்­கப்­பள்ளி ஒன்­றில் மாண­வர் சேர்க்கையை அதி­க­ரிக்­கும் வகை­யில், தங்­களது குழந்­தை­களைப் பள்­ளி­யில் சேர்க்­கும் பெற்­றோ­ருக்கு மின்விசிறி இல­வசமாக பள்­ளி­யின் சார்­பில் வழங்­கப்­படும் என ஆசி­ரி­யர்­க­ள் அறி­வித்துள்ளனர். இம்முயற்சி கிராம மக்­களை வெகு­வாகக் கவர்ந்­துள்­ளது.

தமி­ழ­கத்­தில் பள்­ளி­கள் வரும் ஜூன் மாதம் 13ஆம் தேதி திறக்­கப்­பட உள்ள நிலை­யில், ஆசி­ரி­யர்­கள் மாண­வர்­க­ளின் சேர்க்­கையை அதி­க­ரிக்க பல முயற்­சி­ க­ளையும்­ எடுத்து வரு­கின்­ற­னர்.

திரு­வள்­ளூர் மாவட்­டம் அத்தி­மாஞ்­சேரி ஊராட்சி ஒன்­றிய தொடக்­கப்­பள்­ளி­யில் மாண­வர்­கள் சேர்ந்­தால், மாண­வர்­க­ளின் பெற்­றோ­ருக்குப் பள்­ளி­யின் சார்­பில் மின்விசிறி, தர­மான இல­வசக் கல்வி, கல்வி உப­க­ர­ணங்­கள், காலைச் சிற்­றுண்டி, மதிய உணவு உள்ளிட்டவை வழங்­கப்­படும் என்று தெரிவித்துள்ளனர்.