இணைய ரம்மி விளையாட்டு வேண்டாம் என எச்சரிக்கை

இணைய ரம்மி விளையாட்டு வேண்டாம் என எச்சரிக்கை

1 mins read
564b3529-c351-40d1-8b27-ad846bdb34bc
டிஜிபி சைலேந்திர பாபு.படம்: தமிழக ஊடகம் -

சென்னை: இணைய ரம்மி விளம்­பரத்­தில் நடி­கர்­கள் வரு­வதை நம்பி ஏமாந்து உங்­க­ளது வாழ்க்­கை­யைத் தொலைத்­து­வி­டா­தீர்­கள் என்று காவல்­துறை தலை­வர் டிஜிபி சைலேந்­தி­ர­பாபு இளை­யர்­க­ளுக்கு அறி­வு­றுத்தி உள்­ளார்.

வீட்­டில் இருந்தே இணை­யத்­தில் விளை­யாடி அதிக பணம் சம்­பா­திக்­க­லாம் என்று ஆசைப்­பட்டு இணைய மோச­டி­களில் சிக்கி சிறுகச் சிறுக சேமித்த பணத்தை இழந்து, மன­வே­த­னை­யில் உயிரை மாய்த்துக்கொள்வோரின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­ம் நிலை யில், காணொ­ளி ஒன்றை வெளி யிட்டு எச்­ச­ரித்துள்ளார் டிஜிபி சைலேந்­தி­ர­பாபு.

"ரம்மி விளை­யாட்டு முத­லில் வெற்றி பெறுவது போல ஆசை­யைத் தூண்டி­விட்டு, பின்பு அனைத்து பணத்­தை­யும் இழக்­கும் வகை­யில் உரு­வாக்­கப்பட்­டுள்­ளது. பிடித்த நடி­கர்­கள் ரம்மி விளம்­ப­ரங்­களில் வரு­வ­தைப் பார்த்து யாரும் இந்த மோச­டி­யில் சிக்கிக் கொள்ள­வேண்­டாம்.

"இது உண்­மை­யான இணைய விளை­யாட்டு அல்ல. இணைய ரம்மி மோசடி. எனது இந்­தக் காெணாளி­யைக் கண்­ட­பி­ற­கும் நீங்­கள் விளை­யா­டப் போனால் மிகப்பெரிய தவறை செய்­கி­றீர்­கள், அதிக அள­வில் பேராசை உங்­க­ளி­டம் உள்­ளது என்­று­தான் அர்த்­தம்.

"இதைப் புரிந்­து­கொண்டு விளை­யாட்­டில் ஈடு­ப­ட­வேண்­டாம். இத­னால், பணம் நஷ்­டம். அவ­மா­னம் ஏற்­படும். குடும்­பத்­தில் பிர­ச் சினைகள் ஏற்­படும். உயிரை இழக்­கும் சூழ­லும் உள்­ளது. எனவே, ரம்மி விளை­யாட்டு வேண்­டவே வேண்­டாம். இது தமிழக காவல்­து­றை­யின் அன்­பான வேண்­டு கோள்," என குறிப்­பிட்­டுள்­ளார்.