செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
1b0d9721-fdce-45c3-a993-59bc0acbed91
-

நியாயவிலைக் கடைகளில் கருவிழிப் பதிவுமுறைக்கு ஏற்பாடு

மதுரை: மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, மாநிலம் முழுவதும் உள்ள அைனத்து நியாயவிலைக் கடைகளிலும் பொருள்களை வாங்க இனிமேல் கைரேகை பதிவுக்குப் பதிலாக கருவிழிப் பதிவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ப.சிதம்பரம் வேட்புமனுத் தாக்கல்

சென்ைன: மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் மூன்று வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் ஓரிடம் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த ஓர் இடத்திற்கு கடும் போட்டி நிலவிய சூழலில், இத்தேர்தலில் போட்டியிடும் ப.சிதம்பரம் நேற்று பகல் 12 மணியளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியான சீனிவாசனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். ஏற்கெனவே ப.சிதம்பரம் ஏழு முறை எம்.பி.யாக இருந்துள்ளார்.

சுற்றுலாப் பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழப்பு; 20 பேர் காயம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே சுற்றுலாப் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். இருபதுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ராமேஸ்வரம்-மதுரை இடையே மீண்டும் ரயில் சேவை துவக்கம்

மதுரை: இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ராமேஸ்வரம் பயணிகள் ரயில் நேற்றுமுதல் மீண்டும் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். காலையில் மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கும் மாலையில் ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கும் என தினம் ஒருமுறை ரயில் இயக்கப்படுகிறது. இரு வழித்தட ரயில்களும் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், உச்சிபுளி, வாலாந்தரவை, ராமநாதபுரம், பரமக்குடி, சூடியூர், மானாமதுரை, ராஜகம்பீரம், திருப்பாசேத்தி, திருப்புவனம், சிலைமான் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள கால அட்டவணை குறிப்பிட்டுள்ளது.

இறைவன் பெயரில் ரூ.50 லட்சம்

வசூலித்த பாஜக ஆதரவாளர் கைது

சென்ைன: பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூரில் உள்ள மதுர காளியம்மன் கோவிலை புனரமைப்பதாகக் கூறி இணையத்தளம் வழியாக ரூ.50 லட்சம் வசூலித்து மோசடி செய்துவிட்டதாக பாஜக ஆதரவாளரான கார்த்திக் கோபிநாத் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முதியோா் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு சென்னையில் தொடக்கம்

சென்ைன: முதியோருக்கான பிரத்தியேகப் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு சென்னை வி.எஸ். மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த முதியோா் புற்றுநோய் சிறப்பு மையமாக இது செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முதியவா்களைக் கையாள்வது என்பது மிகவும் சவாலானதாக உள்ளது. புற்றுநோய்க் கட்டியை கதிரியக்க சிகிச்சை மூலம் அகற்றிவிட முடியும் என்றாலும் முதியோருக்கு அதை மேற்கொள்ள முடிவதில்லை. இதன் காரணமாகவே புற்றுநோய் பாதித்த முதியவா்களுக்கு சிகிச்சை அளிப்பது மிகவும் சிரமமானதாக உள்ளது," என முதியோா் நல சிறப்பு மருத்துவா் டாக்டா் வி.எஸ். நடராஜன் கூறினார்.