சென்னை: சிசுவின் பாலினம் குறித்து முன்கூட்டியே கூறுவது சட்டப்படி குற்றமாக வகைப் படுத்தப்பட்டு உள்ள நிலையில், கிராமப் பகுதிகளில் பெரும்பாலான குடும்பங்கள் ஆண் குழந்தைகளுக்கே முன்னுரிமை அளித்து வருகின்றன. ஆனால், குழந்தை களைத் தத்தெடுக்கும் பெற்றோா், பெண் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளித்து வருவது புள்ளிவிவரம் வழி தெரியவந்துள்ளது.
இச்சூழல் பெரும் ஆறுதல் அளிப்பதாக சமூக ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.
இந்நிலையில், தமிழகத்தில் 2019-20ஆம் நிதி ஆண்டுகளில் 127 ஆண் குழந்தைகளும் 163 பெண் குழந்தைகளும் என மொத்தம் 290 குழந்தைகள் தத்து எடுக்கப்பட்டு உள்ளனர். இதேபோல், 2020-21ஆம் நிதியாண்டுகளில், 137 ஆண் குழந்தைகளும் 215 பெண் குழந்தைகளும் என 353 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

