சென்னை: தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் இருப்பதைக் கண்டித்து, பாஜக சார்பாக நேற்று போராட்டம் நடத்தப்பட்டது.
சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்காக சென்னை எழும்பூரில் பாஜகவினர் ஒன்று திரண்ட நிலையில், அவர்களை அங்கு செல்ல விடாமல் காவலர்கள் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அதன்பின்னர் செய்தி யாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "இன்னும் 20 நாள்களில் பெட்ரோல், டீசல் விலையைத் திமுக அரசு குறைக்கவில்லை எனில், மாவட்டம்தோறும் அறவழியில் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்.
"நாங்கள் கோட்டையை நோக்கி வருவதை அறிந்தவுடன் முதல்வர் ஸ்டாலின் டெல்டா மாவட்டத்திற்குச் சென்று விட்டார். முதல்வர் எங்கே சென்றாலும் பாஜக விடப் போவது கிடையாது," எனத் தெரிவித்தார்.

