சேலம்: எடப்பாடி தனியார் மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு செய்வதற்காக வந்த பெண் ணிற்குத் தவறான முறையில் மூன்று முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை அடுத்து அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரும் உறவினர்களும் மருத்துவமனையை முற்றுகையிட்டு சாலைமறியலில் ஈடுபட்டனர்.
மருத்துவமனையின் கதவு, கண்ணாடிகள், கணினிகளை உடைத்த அவர்கள், தவறான சிகிச்சை அளித்த மருத்துவரைக் கைது செய்யும்படி போராட்டம் நடத்தினர்.
இதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஏற்கெனவே, இதே மருத்துவரின் தவறான அறுவை சிகிச்சை காரணமாக மூன்று பேர் உயிரிழந் துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சேலம் மாவட்டம், எடப்பாடி தனி யார் மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணிற்கு மூன்று முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை அடுத்து அவர் உயிரிழந்ததாகச் சொல்லப்படுகிறது.
இங்குள்ள ஜலகண்டாபுரம் சவுரியூர் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி, 31. இவரது மனைவி சங்கீதா, 28.
இவர்களுக்கு 11 வயது, 7 வய தில் இரு குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 20 நாள்களுக்கு முன்பு எடப்பாடியில் உள்ள மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு அறுவைசிகிச்சை செய்துகொண்டு வீடு திரும்பினார் சங்கீதா.
இந்நிலையில், இரண்டு வார காலத்தில் அவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்படவே, திரும்பவும் அதே மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். பரிசோதனையில் வயிற்றில் ரத்தக் கட்டி இருப்பதாகக் கூறி இரண்டாவது முறையாக மருத்துவர் அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
இந்நிலையில், சங்கீதாவிற்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து, மூன்றாவது முறையாக அதே மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ததில் நேற்று முன்தினம் இரவு சங்கீதா உயிரிழந்தார்.

