பழனிசாமி: கிராமம் முதல் நகரம் வரை அமோகமாக நடக்கிறது கஞ்சா விற்பனை

பழனிசாமி: கிராமம் முதல் நகரம் வரை அமோகமாக நடக்கிறது கஞ்சா விற்பனை

2 mins read
553f7909-f5c4-41ae-b341-4e4a8d0b185a
-

சென்னை: தமி­ழ­கத்­தில் ஆளுங் கட்சி ஆத­ர­வு­டன் கஞ்சா விற்­பனை அமோகமாக நடப்­ப­தால் காவ­லர்­க­ளால் அதைத் தடுக்க முடி­யவில்லை என்று எதிர்க்­கட்­சித் தலை­வர் பழ­னி­சாமி கூறி­யுள்­ளார்.

மாநிலத்தில் கிராமம் முதல் நகரம் வரை கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருவதாகவும் இதனால் சட்டம்-ஒழுங்கு சீர் குலைந்துவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

"இந்­தி­யா­வி­லேயே முதன்மை இடத்­தில் தமிழகம் உள்­ள­தாக முதல்­வர் ஸ்டா­லின் சொல்­லிக் கொள்­கி­றார். ஊழல் செய்­வ­தில் முதன்ைம இடத்­தில் உள்­ளார். லஞ்­சம் பெறு­வதில் திமுக முதன்­மை­யாக விளங்­கி வரு­கிறது.

"ஏறக்­கு­றைய 2,200 வழக்­கு­கள் பதிவு செய்­யப்­பட்­டுள்ள நிலை­யில், அவ்­வ­ளவு பேரை­யும் ஏன் கைது செய்­ய­வில்லை? அதற்கு என்ன கார­ணம்?

"அைனத்து மாவட்டங்களிலும் ஆளும் கட்­சி­யின் ஆத­ர­வு­டன் கஞ்சா விற்­பனை நடந்­து­கொண்­டுள்­ளது. காவ­லர்­களின் கரங்­கள் கட்­டப்­பட்­டுள்­ளன. காவல்­து­றை­யி­னர் சுதந்­தி­ர­மாக செயல்­பட்­டால்தான் கஞ்சா விற்­பனையைத் தடை­செய்ய முடி­யும்.

"இணைய ரம்மி விளை­யாட்டை தடை செய்­ய­வேண்­டும் என்று பலமுறை வலியுறுத்திவிட்டோம். ஆனால், திமுக அரசு எந்த நட வடிக்கையும் இதுவரை எடுக்க வில்லை," என்று பழ­னி­சாமி கூறினார்.

இதனிடையே, தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சிறப்பான முறை யில் பராமரிக்கப்பட்டு வருவதாக தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

"அதிமுகவுக்கு தோ்தலில் ஏற்பட்டிருக்கக் கூடிய தோல்வி களால் விரக்தியின் அடிப்படையில் திமுக அரசின் மீது பழனிசாமி அவதூறுகளை அள்ளி வீசியிருக் கிறாா். தமிழக அரசியலில் அதிமுக இருக்கிற இடம் தெரியாமல் படுத்தேவிட்டது. இதனை சசிகலாவும்கூட கூறியிருக்கிறாா்.

"அதிமுக ஆட்சியில்தான் சட்டம் ஒழுங்கு சீா்கெட்டு கிடந் தது. ஆனால், குற்றச்செயல்களில் ஈடுபடுவோா் மீது தற்போது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது," என்று கூறியுள்ளார்.