நீலகிரி: இந்தியக் கப்பல் படை அதிகாரியாகத் தேர்வாகி உள்ள உதகையைச் சேர்ந்த முதல் படுகர் இனப் பெண்ணுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
நீலகிரி மாவட்டம், அச்சனக்கல் பகுதியைச் சோ்ந்தவர்கள் ரவீந்திர நாத்-மாலதி தம்பதியர். இவர்களது மகள் மீரா, 23.
ரவீந்திரநாத் இந்திய ராணு வத்தில் மருத்துவப் பிரிவில் பணி யாற்றி ஓய்வுெபற்றவர். தனது மகளையும் ராணுவத்தில் சேர்க்க ஆசைப்பட்டவர், தான் பணி மாற்றம் பெற்றுச் செல்லும் இடங்களுக்கு எல்லாம் மகள் மீராவையும் அழைத் துச் சென்றுள்ளார்.
பொருளியல் பட்டதாரியான மீரா, ராணுவத் தேர்வில் வெற்றிபெற்றதை அடுத்து, கப்பல் படை அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சியை முடித்துக்கொண்டு சொந்த ஊர் திரும்பினார்.
கொச்சியில் உள்ள கப்பல்படைத் தளத்தில் சப்-லெப்டினென்ட் என்ற பொறுப்பை ஏற்கவுள்ள மீரா, கப்பல் படை அதிகாரியாகத் தேர்வான முதல் படுகர் இனப் பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
"ஒரு பட்டத்தை முடித்தோம், ஏதோ ஒரு நிறுவனத்தில் சேர்ந்து வேலை பார்த்தோம், சம்பாதிக்கி றோம் என்று நிைனக்காமல் நாட்டுக்காக ஏதாவது சேவை செய்ய விரும்புபவர்கள் என்னைப் போல் முயற்சி செய்து பாருங்கள். நிறைய வாய்ப்புகள் உள்ளன. நம்மை நாமே முன்னேற்றிக்கொள்ள நாம்தான் அவற்றைத் தேடிப் பெற வேண்டும்," என்று கூறினார் மீரா.
மலைப்புற மாவட்டங்களில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் குறை வாக இருந்தும் தடைகளைத் தகர்த்து சாதித்துள்ளார் மீரா.

