சிவகங்கை: மாட்டுவண்டி, லாரிகள், டிராக்டர் வாகனங்கள் மூலம் மணல் கடத்தப்படும் சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால், இப்ேபாது ஒரு புது முயற்சியாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் ஒட்டகம் மூலம் மணல் கடத்தி உள்ளார்.
காளையார்கோவில் அருகே உள்ள மறவமங்கலம், பல்லாக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் 52 வயது சரவணன்.
சவூதி அரேபியாவில் வேலை பார்த்து வந்தவர், இரு மாதத்துக்கு முன் சொந்த ஊர் திரும்பினார்.
இந்நிலையில், ராஜஸ்தானில் இருந்து ஒட்டகம் ஒன்றை வாங்கி வந்து வளர்த்து வந்தவர், இதன் மூலம் மணல் கடத்தி, பணம் சம்பா தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
காளையார்கோவில் காவலர்கள் இரவு ரோந்துப் பணியில் ஈடு பட்டுக்கொண்டிருந்தபோது, மாட்டுவண்டியில் ஒட்டகத்தைக் கட்டி நாட்டாறு ஆற்றில் இருந்து சரவணன் மணல் கடத்தி வருவது அவர்களுக்குத் தெரியவந்தது.
இதையடுத்து, மாட்டுவண்டியை யும் ஒட்டகத்தையும் பறிமுதல் செய்த காவலர்கள், காவல்நிலை யத்துக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால், அவர்களால் ஒட்டகத்துக்கு என்ன தீனி போடுவது, எப்படிப் பராமரிப்பது என்பது ெதரி யாததால், சரவணனிடமே ஒட்ட கத்தை ஒப்படைத்தனர்.
விசாரணைக்கு அழைக்கும்போது ஒட்டகத்தையும் அழைத்துவர வேண்டும் என்றும் காவலர்கள் கூறியுள்ளனர்.

