ஊழி­யர்களிடம் ரூ.50,000 வரை லஞ்­சம் பெற்ற மேலதிகாரிகள்; ரூ.840,000 ரொக்கம் பறிமுதல் ஆவின் நிறுவனத்தில் சோதனை

ஊழி­யர்களிடம் ரூ.50,000 வரை லஞ்­சம் பெற்ற மேலதிகாரிகள்; ரூ.840,000 ரொக்கம் பறிமுதல் ஆவின் நிறுவனத்தில் சோதனை

2 mins read
a4c688bb-3c96-4061-b5f6-51ca64a3bdbb
ஆவின் நிறுவன பொது மேலாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து ரூ.8 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. படம்: ஊடகம் -

கோவை: கோவை ஆவின் தலைமை அலு­வ­ல­கத்­தில் லஞ்ச ஒழிப்­புத் துறை­யி­னர் நடத்­திய திடீர் சோத­னை­யில் கணக்­கில் வராத 840,000 ரூபாய் கட்­டுக்­கட்­டாக பறி­மு­தல் செய்­யப்­பட்டு உள்­ள­தா­கத் தக­வல் வெளி­யாகி உள்­ளது.

இது லஞ்­சப்­ப­ணம் என்­ப­து விசா­ர­ணை­யில் உறு­தி­யானது.

கோவை மாவட்­டம், பச்­சா­பாளை யத்­தில் செயல்­பட்டு வரும் ஆவின் நிறு­வ­னத்­தில் 15,000க்கும் மேற்­பட்ட உறுப்­பி­னர்­கள் உள்­ள­னர். இவர்­களில் பால் ஊற்­றும் உறுப்பினர்­கள் மட்­டும் 8,000 பேருக்கும் மேலானோர் உள்­ள­னர்.

இந்­நி­லை­யில், இங்கு பணி­யாற்­றும் ஒப்பந்த ஊழியர்கள் 20 பேரி­டம் பணி நிரந்­த­ரம் செய்வதா­கக் கூறி உயர் அதி­கா­ரி­கள் லஞ்­சம் வாங்­கி­ய­தாக புகார்கள் எழுந்­தன.

இதுபோல், ஒவ்வோர் ஊழி­ய­ரிடம் இருந்­தும் கட்­டா­யப்­ப­டுத்தி ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை லஞ்­சம் பெறப்­பட்­டுள்­ளது.

அத்துடன், 20 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி வரும் பல­ரது சம்­பள நிலு­வைத் தொகையைத் திரும்ப வழங்கு­வ­தற்கு பொது மேலா­ளர் கிருஷ்ணமூர்த்தி உள்­ளிட்ட அதி­கா­ரி­கள் தங்­க­ளுக்கு லஞ்­சம் தர­வேண்­டும் எனவும் வற்­புறுத்தி உள்­ள­னர்.

ஊழியர்களுக்கு வந்த நிலுவைத் தொகையில் பாதியை எடுத்துக் கொண்ட நிலையில், அதி­ருப்­தி­­அடைந்த ஊழி­யர்­கள், கோவை லஞ்ச ஒழிப்­புத்­துறை காவல்­து­றை­யி­ன­ருக்குத் தக­வல் தெரி­வித்­த­னர்.

இதனைத் தொடர்ந்து, நேற்று முன்­தி­னம் மாலை அலு­வ­ல­கப்­பணி முடி­யும் நேரத்­தில் கூடு­தல் எஸ்.பி. திவ்யா தலை­மை­யில் லஞ்ச ஒழிப்­புத் துறை காவல்­துை­ற­யி­னர் கோவை பச்­சா­பா­ளை­யம் ஆவின் தலை­மை­ய­கத்­திற்குள் புகுந்­த­னர்.

அதன்­பின்­னர், ஆவின் வளா கத்­தில் உள்ள அனைத்து அதி­கா­ரி­க­ளின் அறை­களிலும் சோதனை நடந்தது. நள்­ளி­ரவு வரை நீடித்த சோத­னை­யில், ஆவின் நிறுவனத்தின் பொது மேலாளர் கிருஷ்ணமூர்த் தி­யின் கார், அல­மாரி­யில் இருந்து எட்டு லட்சம் ரூபாய் கைப்­பற்­றப்­பட்­ட­தா­கத் தெரி­கிறது. விசா­ரணை தொடர்கிறது.