ஆஸ்திரேலியா, அமெரிக்காவில் இருந்து பத்து சிலைகள் மீட்பு

ஆஸ்திரேலியா, அமெரிக்காவில் இருந்து பத்து சிலைகள் மீட்பு

2 mins read
280be02b-61c9-46e8-a27f-9a9d18fe9d5f
வலமிருந்து இடமாக: மத்திய இணை அமைச்சர் எல் முருகன், மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி, கலாசாரத் துறை இணை அமைச்சர்கள் மீனாட்சி லேகி, அர்ஜூன் ராம் மேஹ்வால் (இடக்கோடி) ஆகியோர் முன்னிலையில் தமிழக காவல்துறை தலைவர் டிஜிபி சைலேந்திர பாபுவிடம் (இடமிருந்து இரண்டாவது) பத்து சிலைகளும் ஒப்படைக்கப்பட்டன. படம்: டுவிட்டர்/@கிஷண் ரெட்டி -

புதுெடல்லி: ஆஸ்­தி­ரே­லியா, அமெ­ரிக்கா ஆகிய நாடு­களில் இருந்து மீட்­கப்­பட்ட விலை மதிப்­பற்ற 10 புரா­த­னச் சிலை­கள் மத்­திய அமைச்­சர்­கள் முன்னிலையில் தமி­ழக காவல்­துறை தலை­வர் டிஜிபி சைலேந்­திர பாபு­வி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

தமி­ழ­கக் கோவில்­களில் இருந்து கள­வா­டப்­பட்ட இந்த உலோக, கற் சிலை­கள் அனைத்­தும் அமெ ரிக்கா, ஆஸ்­தி­ரே­லி­யா­வின் அருங் காட்­சி­ய­கத்­தில் இருந்து மீட்­கப்­பட்டு உள்­ள­தாக மத்­திய கலா­சா­ரத் துறை அமைச்­சர் கிஷண் ரெட்டி தெரிவித்­தார்.

துவா­ர­பா­ல­கர், நட­ரா­ஜர், கங்­க­ல­மூர்த்தி கட­யம், நாடி­கேஸ்­வர கட­யம், நான்கு கைக­ளைக் கொண்ட விஷ்ணு, ஸ்ரீதேவி, சிவன், பார்­வதி, குழந்­தைப் பருவ சம்­பந்­தர், நின்ற கோலத்­தில் குழந்தை பருவ சம்­பந்­தர் ஆகிய சிலை­கள் தமி­ழக அர­சி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளன.

சிலை­களை மத்­திய இணை அமைச்­சர் எல் முரு­கன் முன்னி லையில் மத்­திய அமைச்­சர் கிஷண் ரெட்­டி­யி­டம் இருந்து டிஜிபி சைலேந்­தி­ர­பாபு பெற்­றுக்­கொண்­டார்.

கும்பகோணத்­தில் உள்ள சிறப்பு நீதி­மன்­றத்­தில் சிலை­களை முன்­னி­லைப்­ப­டுத்தி, நீதி­மன்ற உத்த­ர­வுப்­படி சம்­பந்­தப்பட்ட கோயில்­களில் வெகு­வி­ரை­வில் சிலைகள் ஒப்­படைக்கப்பட உள்­ள­தா­க­வும் தக­வல்­கள் குறிப்­பிட்­டுள்­ளன.

இது­கு­றித்து கிஷண் ரெட்டி கூறு­கை­யில், "வெளி­நா­டு­களில் இருந்து இந்­திய பாரம்­ப­ரி­ய­மிக்க சிலை­களை மீட்­ப­தில் பிர­த­மர் மோடி மிகுந்த ஆர்­வம் கொண்­டுள்­ளார். அவ­ரது அய­ராத முயற்சியால் கடந்த எட்டு ஆண்டுகளில் 228 தொல்­பொ­ருள்­கள் அமெ­ரிக்கா, இங்­கி­லாந்து, ஜெர்­மனி, கனடா, பிரான்ஸ், சிங்­கப்­பூர் உள்­ளிட்ட நாடு­களில் இருந்து மீட்­கப்­பட்­டுள்­ளன.

"தற்­போது தமி­ழ­கத்­தின் 10 தெய்­வச் சிலை­கள் மீட்­கப்­பட்டு ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளன," என்­றார்.

மத்­திய செய்தி, ஒலி­ப­ரப்­புத் துறை இணை­ய­மைச்­சர் எல்.முரு­கன் பேசு­கை­யில், "தமி­ழ­கத்­தின் தொன்­மை­மிக்க 10 சிலை­களும் மீட்­கப்­பட்டு ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளன. இதற்­காக தமி­ழ­கம், தமி­ழக மக்­கள் சார்­பி­ல் பிர­த­ம­ருக்கு நன்றி கூறிக்கொள்­கி­றேன்," என்­றார்.

டெல்­லி­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் டிஜிபி சைலேந்­திரபாபு பேசிய போது, "ஒரே நேரத்­தில் 10 சிலை­கள் மீட்­கப்­பட்­டி­ருப்­பது இது­தான் முதல்முறை­. மேலும், இது­போன்ற வேறு சிலை­கள் குறித்த விவ­ரம் கிடைத்­துள்­ளது. அவற்றையும் மீட்­பதற்­கான நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கிறது," என்றார்.