‘சொகுசுக் கப்பலுக்கு அனுமதி தரவில்லை’

புதுச்சேரி: தமிழக அரசின் சொகுசுக் கப்பலுக்கு யூனியன் பிரதேசமான புதுச்சேரி அரசு எந்த அனுமதியும் அளிக்கவில்லை என தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநரும் புதுவை துணைநிலை ஆளுநருமான தமிழிசை செளந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் தமிழகத்தில் முதல்முறை யாக சொகுசுக் கப்பல் சேவையை இரு தினங்களுக்கு முன்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

சென்னை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு, புதுச்சேரி, விசாகப்பட்டினம் சென்றபின்னர் மீண்டும் சென்னைக்கே திரும்பும் வகையில் இந்த சொகுசுக் கப்பல் பயணத் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயணக் கட்டணம் ரூ.20,000 முதல் ரூ.220,000 வரை நிர்ண யிக்கப்பட்டுள்ளது.

இந்த சொகுசுக் கப்பல் புதுச் சேரிக்கு 11ஆம் தேதி வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதுகுறித்து ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் பேசினார்.

"சொகுசுக் கப்பல் வருவதாக பத்திரிகைகள் மூலம்தான் நாங்கள் தெரிந்துகொண்டுள்ளோம்.

"தமிழகத்தில் இருந்து புதுச் சேரிக்கு வரும் சொகுசுக் கப்பலுக்கு புதுச்சேரி அரசு எந்த அனுமதியும் அளிக்கவில்லை.

"எங்களிடம் கோப்புகள் எதுவும் இதுவரை வரவில்லை. வந்தபிறகு தான் முடிவெடுப்ேபாம்.

"நிச்சயமாக சுற்றுலாத் துறையை ேமம்படுத்தவேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

"சுற்றுலாத் துறைக்கு வருமானம் முக்கியம் என்றாலும், அதற்காக கலாசார சீர்கேடுகளை அனுமதிக்க முடியாது. வருங்காலத்தில் கேளிக் கைகள் அனுமதிக்கப்பட்டாலும் அதில் எவ்விதத்திலும் கலாசார சீர்கேடுகள் இல்லாமலும் மக்களை யும் இளையர்களையும் பாதிக்காத வகையில் சுற்றுலா அமைய வேண் டும் என்பதில் தெளிவாக உள் ளேன்," எனக் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!