திருவள்ளுவர் சிலையைச் சுற்றுப்பயணிகள் கண்டுகளிக்க ஐந்து மாதங்களுக்குத் தடை

திருவள்ளுவர் சிலையைச் சுற்றுப்பயணிகள் கண்டுகளிக்க ஐந்து மாதங்களுக்குத் தடை

1 mins read
99a18935-a2cd-4300-b37a-808b42499df1
குமரிக் கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் படகில் சென்று ரசித்து திரும்புகின்றனர். கடந்த 2000ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட இச் சிலையைக் காண இப்போது அனுமதி மறுக்கப்பட்டு ஐந்து மாத காலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. படம்: தமிழக ஊடகம் -

கன்­னி­யா­கு­மரி: கன்­னி­யா­கு­மரி மாவட்­டத்­தில் கடல் நடுவே காட்சி அளிக்கும் 133 அடி உயர திரு­வள்­ளு­வர் சிலை­யைப் பார்­வை­யிட ஐந்துமாத காலத்துக்கு சுற்­றுப் ­ப­ய­ணி­க­ளுக்­குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

கடலின் உப்­புக் காற்­றி­லி­ருந்து திரு­வள்­ளு­வர் சிலை­யைப் பாது­காக்­கும் வகை­யில், ரூ.1 கோடி செல­வில் அதன்மீது ரசா­ய­னக் கலவை பூசும் பணி­யி­னைத் தக­வல் தொழில்­நுட்­பத் துறை அமைச்­சர் மனோ தங்­க­ராஜ் நேற்று தொடங்கிவைத்­தார்.

மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சிலைமீது ரசா­ய­னக் கலவை பூசப்­பட்டு வருகிறது. இறு­தி­யாக கடந்த 2017ஆம் ஆண்டில் இது போல் ரசா­ய­னக் கலவை பூசப்­ பட்­டது.

இந்நிலையில், சிலிக்­கான் எனப்­படும் ரசா­ய­னக் கலவை பூசும் பணி தொடங்க உள்­ளது.

சிலை­யில் உள்ள வெடிப்­பு­களில் சுண்­ணாம்­புக் கலவை பூசப்­பட்டு, காகி­தக்­ கூழால் சிலை­யில் படிந்­துள்ள உப்­புக் கரை­சல் நீக்­கப்­படும்.

அதன்­பின்­னர் ஜெர்­மனி நாட்­டி­லி­ருந்து வர­வ­ழைக்­கப்­பட்ட சிலிக்­கான் எனப்­படும் ரசா­ய­னக் கலவை பூசப்­பட உள்­ளது.

இப்­போது தொடங்கி உள்ள இந்­தப் பணி­கள் வரும் நவம்­பர் மாதம் 2ஆம் தேதியன்று நிறை­வுறும் என்­றும் இதன் கார­ண­மாக ஐந்து மாதங்­க­ளுக்கு திருவள்­ளு­வர் சிலை­யைக் காண சுற்­றுலாப் பய­ணி­க­ளுக்கு அனு­மதி இல்லை என்றும் சுற்­றுலா வளர்ச்­சிக் கழ­கம் அறி­வித்­துள்­ளது.