'கிருமிப் பரவலைத் தடுத்திடுக'

'கிருமிப் பரவலைத் தடுத்திடுக'

2 mins read
37ff6670-890c-4995-9ce9-d26257f23f03
கிருமிப் பரவல் நிலவரத்தை நேற்று ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின். -

சென்னை: தமி­ழ­கத்­தில் கொரோனா தொற்று அதி­க­ரித்து வரும் வேளை­யில் அத­னைத் தடுத்து நிறுத்த முதல்­வர் மு.க. ஸ்டா­லின் அதி­கா­ரி­க­ளுக்கு உத்­த­ர­விட்டு உள்­ளார்.

நேற்று தலை­மைச் செய­ல­கத்­தில் தமி­ழ­கத்­தில் கொரோனா தொற்று குறித்தும் எடுக்­கப்­பட வேண்­டிய நட­வ­டிக்­கை­கள் குறித்தும் ஆய்­வுக் கூட்­டம் நடை­பெற்­றது.

தமிழ்­நாடு அர­சின் பன்­முக நோய்த் தடுப்பு நட­வ­டிக்­கை­க­ளா­லும் மக்­க­ளின் ஒத்­து­ழைப்­பி­னா­லும் தமிழ்­நாட்­டில் கொரோனா நோய்த் தொற்று கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

தற்­போது இந்­திய அள­வில் பல மாநி­லங்­களில் கொரோனா நோய்த் தொற்­றின் தாக்­கம் மீண்­டும் அதி கரித்து வரு­கிறது.

இருந்­தா­லும் தமிழ்­நாட்­டில் பதி­வா­கும் கொரோனா தொற்­றின் எண்­ணிக்கை குறைவாகவே உயர்ந்­துள்­ளது. சென்னை மாந­க­ராட்­சி­யைத் தொடர்ந்து, செங்­கல்­பட்டு, காஞ்சிபுரம், கோயம்­புத்­தூர் மற்­றும் திரு­வள்­ளூர் ஆகிய மாவட்­டங்­களில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு காணப்­ப­டு­கிறது.

சென்னையில் உள்ள சில கல்வி நிறுவனங்களில் கொரோனா தாக்கம் காணப்பட்டது. இவை அனைத்தும், நிறுவனங்களின் உதவியுடன் அனைவருக்கும் முழுமையாக பரிசோதனை செய்தும் கொரோனா தாக்கம் இருந்தவர்களை தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளித்தும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த ஆய்வின்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் குறைவாகவே காணப் பட்டாலும் இதனை மேலும் உயராமல் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கொரோனா சிகிச்சை வசதிகளை தயார் நிலையில் வைக்கவேண்டும் என்றும் கொரோனா கட்டுப்பாட்டுப் பணிகளை சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை, நகராட்சி நிர்வாகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை போன்ற துறைகளை ஈடுபடுத்தி உரிய நடவ டிக்கையை எடுக்க வேண்டும் என்றும் மு.க. ஸ்டாலின் கூறினார்.