கருமுட்டை விற்பனை விவகாரம்; விசாரணை பல மருத்துவமனைகளுக்கு விரிவடைகிறது

கருமுட்டை விற்பனை விவகாரம்; விசாரணை பல மருத்துவமனைகளுக்கு விரிவடைகிறது

2 mins read
b2cafb03-f6da-4422-86cc-32d15b2adae7
-

ஈரோடு: ஈரோட்­டில் 16 வயது சிறுமி­­ யி­ட­மி­ருந்து சட்­ட­வி­ரோ­த­மாக கரு­முட்டை எடுத்து விற்­கப்­பட்ட விவ­கா­ரத்­தில் புதுப் புது தக­வல்­கள் வெளி­யா­கி­வ­ரும் ஈரோட்­டில் உள்ள இரண்டு தனி­யார் மருத்­துவ­மனை ஊழி­யர்­க­ளி­டம் 3வது முறை­யாக காவல்­துறை சூப்­பி­ரி­டன்டெண்ட் அலு­வ­ல­கத்­தில் ஏ.டி.எஸ்.பி. கன­கேஸ்­வரி தீவிர விசா­ரணை நடத்­தி­னார்.

இந்த விவ­கா­ரம் தொடர்­பில் ஏற்­கெ­னவே சிறு­மி­யின் தாய், வளர்ப்புத் தந்தை, இடைத்­த­ர­கர், போலி ஆவ­ணங்­களைத் தயா­ரித்து கொடுத்த நபர் என நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்து சிறை­யில் அடைத்துள்­ளனர்.

இந்த நிலை­யில் தீவிர விசா­ரணை நடத்தி வரும் ஈரோடு ஏ.டி.எஸ்.பி கன­கேஸ்­வரி தலை­மை­யி­லான காவல்­துறை குழு, இரண்டு தனி­யார் மருத்­து­வ­ம­னைக்கு அழைப்­பாணை அனுப்பி விசா­ரணை நடத்­தி­யது.

மேலும் திரு­வ­னந்­த­பு­ரம், திருப்­ப­தி­யி­லும் இரண்டு தனி­யார் மருத்­து­வ­ம­னை­க­ளி­லும் சிறு­மி­யி­டம் கரு­முட்டை எடுக்­கப்­பட்­டது விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­தது.

இதற்­காக சிறு­மியை அழைத்­துச் சென்­றது யார் என்ற கேள்வி எழுந்­துள்­ளது.

சிறு­மி­யி­டம் பெருந்­து­றை­யில் உள்ள தனி­யார் மருத்து­வ­ம­னை­யி­லும் கரு­முட்டை எடுக்­கப்­பட்­ட­தா­கத் தெரிகிறது.

அப்­போது பெருந்­துறை மருத்­து­வ­ம­னைக்கு நெருங்­கிய தொடர்­பில் இருக்­கும் கேரள மாநி­லம் திரு­வ­னந்­த­பு­ரத்­தில் உள்ள ஒரு தனி­யார் மருத்து­வ­ம­னைக்கு கரு­முட்டை தேவைப்­பட்­டது.

இது­கு­றித்து அந்த மருத்­து­வ­மனை நிர்­வா­கம் பெருந்­துறை மருத்­து­வம­னை­யி­டம் கேட்டு உள்­ளது. இதை­ய­டுத்து பெருந்­துறை மருத்து­வமனை நிர்­வா­கம் ஏற்­பாட்­டில் இந்த சிறு­மியை அங்கு அழைத்­துச் சென்­றுள்­ள­னர்.

முன்­ன­தாக அந்த சிறு­மிக்கு பெருந்­துறை மருத்­து­வ­மனை யிலேயே அனைத்து மருத்­துவ பரி­சோ­த­னை­களும் செய்­யப்­பட்டு கரு­முட்டை எடுக்க தயா­ரான நிலை­யில் அவரை திரு­வ­னந்­த­பு­ரம் மருத்துவம­னைக்கு அழைத்­துச் சென்று உள்­ள­னர்.

அங்கு சிறு­மியை அனு­ம­தித்து மயக்க ஊசி செலுத்தி கரு­முட்டை எடுக்­கப்­பட்­டது.

இதே­போல் ஓசூ­ரில் உள்ள தனி­யார் மருத்­து­வ­மனை மூலம் ஆந்­திர மாநி­லம் திருப்­ப­தி­யில் உள்ள தனி­யார் மருத்­து­வ­ம­னைக்கு சிறுமி அழைத்துச் செல்­லப்­பட்டு கரு­முட்டை எடுக்­கப்­பட்­ட­தா­கத் தெரி­கிறது. இந்­தச் சூழ்­நி­லை­யில் 3வது முறை­யாக ஈரோட்­டில் உள்ள இரண்டு தனி­யார் மருத்­து­வ­மனை ஊழி­யர்­க­ளி­டம் காவல்­துறை சூப்­பி­ரி­டன்­டெண்ட் அலு­வ­ல­கத்­தில் ஏ.டி.எஸ்.பி. கன­கேஸ்­வரி அதி­ரடி விசா­ரணை நடத்­தி­னார்.

இதற்­கி­டையே ஈரோடு கரு முட்டை விவ­கா­ரம் எதி­ரொ­லி­யாக இனப்­பெ­ருக்க தொழில்­நுட்ப ஒழுங்கு முறை சட்­டத்தை அமல் படுத்த குழு அமைத்து தமிழ்­நாடு அரசு உத்­த­ரவு பிறப்­பித்­தது. மத்­திய அர­சால் கடந்­தாண்டு இயற்றப்­ பட்ட சட்­டத்தை அமல்­ப­டுத்த ஐந்து பேர் கொண்ட குழு அமைக்­கப்­பட்­டது. மருத்துவத்துறை கூடுதல் செயலாளர் தலைவராகவும் குடும்ப நலத்துறை இயக்குநர் துணைத் தலைவராகவும் இருக்கின்றனர்.