திருப்பதி: திருப்பதி மாடவீதியில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் செருப்புடன் நடந்ததாக எழுந்த சர்ச்சையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் மன்னிப்பு கோரியுள்ளார்.
திருப்பதி தேவஸ்தானத் திற்கு அனுப்பியிருக்கும் கடிதத்தில் திருமணம் நடந்தபின் வீட்டுக்குக்கூட செல்லாமல் நேரடியாக திருப்பதி மலைக்கு வந்து ஏழுமலையானின் கல்யாண உற்சவ சேவையில் பங்கேற்றோம். எங்களை ரசிகர்கள் சூழ்ந்துகொள் வார்கள் என்பதால் விரை வாக போட்டோசூட் நடத்தி முடித்து அங்கிருந்து வெளி யேற முடிவு செய்தோம். இந்த பரபரப்பில் காலணி அணிந்து நடமாட தடை விதிக்கப் பட்டுள்ள பகுதியில் காலணி யுடன் நாங்கள் நடமாடிக் கொண்டிருப்பதை கவனிக்க தவறிவிட்டோம். இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள் கிறோம் என்று விக்னேஷ் சிவன் தெரிவித்து உள்ளார்.

