செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
2aab53a4-df9c-45b0-a0a7-17409e722527
-

காங்கயம் கோயிலில் பெண்கள் 'லெக்கின்ஸ்' அணியத் தடை

400 ஆண்டுகள் பழமையான கல்

மதுரை: மதுரை விமான நிலையம் அருகே பரம்புபட்டியில் 400 ஆண்டுகள் பழமையான கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரியின் வரலாற்றுத்துறை பேராசிரியர் முனீஸ்வரன், முனைவர் லட்சுமண மூர்த்தி ஆகியோர் மாணவர்களுடன் மேற்பரப்புகளை ஆய்வு செய்தனர்.

அப்போது விமான நிலையம் பின்புறம் மண்ணில் புதைந்த நிலையில் கலை நுட்பத்துடன் கூடிய கி.பி. 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதிக்கல் கண்டு பிடிக்கப்பட்டது. புதைந்த நிலையில் கண்டறியப்பட்ட சதிக்கல் தோரணவாயில் கலைநயத்தோடு 4 அடி உயரம் 3 அடி அகலமும் கொண்டது.

கல் சிற்பத்தில் ஆண் மற்றும் பெண்ணின் தலையின் கொண்டைப் பகுதி சற்று சாய்வாகவும், ஆடவன் கையில் நீண்ட கத்தியும், அணிகலன்களுடன் கால் பகுதியை மடக்கி தொங்கவிட்டு அமர்ந்த நிலையில் காணப்படுகிறது. இக்கல் சிற்பத்தை தற்போது மக்கள் வழிபடுகின்றனர்.