போக்­கு­வ­ரத்தை சீர­மைத்த இரு காவ­லர்­கள் வேன் மோதி பலி

போக்­கு­வ­ரத்தை சீர­மைத்த இரு காவ­லர்­கள் வேன் மோதி பலி

2 mins read
3df6a97b-7e41-4146-bce8-30c6fa505bf9
விபத்­தில் பலி­யான உதவி ஆய்­வா­ளர் சந்­தி­ர­சே­கர் (இடது), காவ­லர் தேவ­ரா­ஜன்.படம்: தமி­ழக ஊட­கம் -

ராசி­பு­ரம்: நாமக்­கல் மாவட்­டம், ராசி­பு­ரம் அருகே நள்­ளி­ரவு நேரத்­தில் நடந்த சாலை விபத்தை சீர­மைக்­கும் பணி­யில் இரு காவ­லர்­கள் ஈடு­பட்­டுக் கொண்­டி­ருந்­த­னர்.

அப்­போது, வேக­மாக வந்த ஒரு சுற்­றுலா வேன் மோதி­ய­தில் சிறப்பு காவல் உத­வி­யா­ளர் உள்­ளிட்ட இரு காவலர்கள் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரிழந்­த­னர்.

ராசி­பு­ரம் தேசிய நெடுஞ்­சாலை யில் கடந்த சில நாள்­க­ளாக மேம்­பா­லம் அமைக்­கும் பணி நடை பெற்று வரு­கிறது.

இதை­ய­டுத்து, அந்­தப் பாதை­யில் வரும் வாக­னங்­களை மாற்­றுப்­பாதையில் திருப்­பி­வி­டும் வகை­யில் மணல் மூட்­டை­களை அடுக்கி வைத்து, தகர பீப்பாய்களை வைத்­தி­ருந்­த­னர்.

இந்­நி­லை­யில், நேற்று ஞாயி­றன்று அதி­கா­லை­யில் மது­ரை­யில் இருந்து ஓசூர் நோக்கி அதி­வே­க­மாக வந்த வேன் ஒன்று, மாற்­றுப்­பா­தைக்­கான எச்­ச­ரிக்கைப் பல­கை­களைக் கவ­னிக்காமல் நேரே சென்று தடுப்­புத் தட்­டி­கள் மீது மோதி விபத்­துக்­குள்­ளா­னது.

இத­னை­ய­டுத்து, சம்­பவ இடத் துக்கு வந்த ராசி­பு­ரம் காவல்­துறை யினர் விபத்­துக்­குள்­ளான காரை அப்­பு­றப்­ப­டுத்தி போக்­கு­வ­ரத்தை சீர­மைத்து வந்த­னர்.

அப்­போது தஞ்­சா­வூ­ரி­லி­ருந்து இளம்­பிள்ளை நோக்­கிச் சென்று கொண்­டி­ருந்த சுற்­றுலா வேன், போக்­கு­வ­ரத்தை சீர­மைக்­கும் பணி­யில் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருந்த இரு காவலர்கள் மீதும் வேக­மாக வந்து மோதி­யது.

இதில், புதுச்­சத்­தி­ரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்­வா­ளர் சந்­தி­ர­சே­கர், தலை­மைக் காவ­லர் தேவ­ரா­ஜன் ஆகிய இரு­வ­ரும் சம்­பவ இடத்திலேயே உயி­ரி­ழந்­த­னர்.

இவ்விபத்­தில் சுற்­றுலாப் பயணி கள் பல­ரும் காய­ம­டைந்­த­னர். அவர்­கள் அனை­வ­ரும் ராசி­பு­ரம் அரசு மருத்­து­வ­ம­னை­யில் அனுமதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

விபத்து குறித்து காவல் துறை அலு­வ­லர்­கள் நடத்திய விசா­ரணை யில், முத­லில் விபத்­துக்­குள்­ளான கார் மது­ரை­யில் இருந்து வந்­த­தா­க­வும் ஓட்­டு­நர் தூக்­கக் கலக்­கத்­து­டன் வந்­த­தால் தடுப்பு வேலி­யில் மோதி நின்­ற­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது. இத­னால் ஏற்­பட்ட போக்­கு­வரத்து நெரி­சலை ஒழுங்­குப் ­ப­டுத்த வந்த ராசி­பு­ரம் காவல்­ துறையைச் சேர்ந்த தேவ­ராஜ், சந்­தி­ர­சே­கர் இரு­வ­ரும் போக்­கு­வரத்தை ஒழுங்­கு­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கும்­போது, அதி­வே­க­மாக வந்த லாரியை நிறுத்தி விசா­ரித்­த­தில் ஓட்­டு­நர் குடி­போ­தை­யில் இருந்­துள்­ளார். அவரை கீழே இறங்­கச் சொல்லி பேசிக் கொண்­டி­ருக்­கும்­போது திரு­நள்­ளா­ரில் இருந்து இளம்­பிள்ளை நோக்கி வந்த சுற்­றுலா வேன் காவ­லர்­கள் மீது அதி பயங்­க­ர­மாக மோதி விபத்து ஏற்­பட்­டுள்­ள­தாக முதற்­கட்ட தக­வல் தெரி­ய­வந்­துள்­ளது. விபத்து குறித்து விசா­ரணை தொடர்கிறது.

இதற்கிடையே, விபத்தில் உயிரிழந்த இரண்டு காவலர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.