தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளியான தனேஷ் கனகராஜ். இவர், தசைநார் சிதைவு குறைபட்டால் கடந்த ஜன வரி மாதம் மரணமடைந்த தனது தங்கை கவிதாவின் நினைவாக, தான் குடியிருந்த வீட்டை மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச சிகிச்சை வசதியுடன் கூடிய சிறப்புப் பள்ளியாக மாற்றிக் கொடுத் துள்ளார்.
இந்த சிறப்புப் பள்ளியை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
"போதிய தசைநார் சிதைவு சிகிச்சையும் விழிப்புணர்வும் இன்றி என் தங்கைபோல் இனியும் எவரும் உயிரிழக்கக் கூடாது என்பதால், எனது வீட்டை சிறப்புப் பள்ளியாக மாற்றிக் கொடுத்துள்ளேன்," எனக் கூறியுள்ளார் தனேஷ் கனகராஜ்.

