சென்னை: சென்னை மயிலாப்பூா் நொச்சிக்குப்பத்தில் கட்டப்பட்டி ருக்கும் கோயிலை இடிப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இங்குள்ள கங்கா பவானி அம்மன் கோயில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாக சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக் கப்பட்டதை அடுத்து, கோயிலை அகற்ற 2020ஆம் ஆண்டு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், கோயிலை அகற்றுவதற்கு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள், பொக்லைன் இயந்திரங்களுடன் வந்ததை அடுத்து, கோயிலை இடிக்கக் கூடாது என கோயில் முன்பாக அமா்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், காவலர்கள் அங்கு குவிக்கப்பட்டனர்.

