செய்­திக்­கொத்து

செய்­திக்­கொத்து

2 mins read
3d2be7d3-a2ad-4a82-bbef-0d800f4621a0
தனது கணினி மையத்தின் வாசலில் கிடந்த நகைப்பையை தேவ­கோட்டை காவல்­நி­லை­யத்­தில் ஒப்­ப­டைக்கும் முகம்மது இப்ராஹிம்.படம்: ஊடகம் -

உரி­ய­வ­ரி­டம் 16 பவுன் நகையை ஒப்­ப­டைத்த இளை­ய­ருக்கு பாராட்டு

சிவகங்கை: சிவ­கங்கை மாவட்­டம், தேவ­கோட்­டை­யில் தனது கடை­யின் வாசல் படிக்­கட்­டில் கிடந்த பதி­னா­றரை பவுன் தங்க நகை­களைக் காவல்­நி­லை­யத்­தில் ஒப்­ப­டைத்த இளை­ஞர் முக­ம்மது இப்­ரா­ஹிமை காவலர்கள் பாராட்டினர். விசா­ர­ணை­யில், நகைப்­ பையைத் தவ­ற­விட்­டது போரி­வ­யல் கிரா­மத்­தைச் சேர்ந்த பிரி­யங்கா என்பது தெரி­ய­வந்­த­தை­ ­அடுத்து நகை­ப் பை அவரிடம் ஒப்­ப­டைக்கப்பட்டது.

அதி­மு­க­வில் இணை­ய­மாட்­டோம்

சிவகாசி: சிவ­கா­சி­யில் நடை­பெற்­ற கூட்­டம் ஒன்றில் அம்மா மக்­கள் முன்­னேற்றக் கழ­கத்­தின் பொதுச்­செ­ய­லா­ளர் டி.டி.வி.தின­க­ரன் கலந்துகொண்டு பேசி­யபோது, "ஜெயலலிதாவின் கொள்­கைப்­படி நடக்­கும் ஒரே இயக்­கம் அமமுக மட்டும்தான். நான் அட்­டைக்­கத்தி வீசு­ப­வன் இல்லை. ஜெய­ல­லி­தா­வி­டம் அர­சி­யல் பாடம் படித்­த­வன். எடப்­பாடி பழ­னி­சாமி வியா­பார நோக்­கத்­தில் செயல்­பட்­ட­தால்­தான் திமுக ஆட்­சிக்கு வந்­துள்­ளது. கடந்த ஓராண்டு காலத்தில் திமுகவின் சாயம் வெளுத்­து­விட்­டது. தேர்­தல் நேரத்­தில் திமுக கொடுத்த வாக்­கு­று­தி­கள் காற்­றில் பறக்க­வி­டப்­பட்­டுள்­ளன. அதிமுகவில் ஒரு போதும் இணை­ய­மாட்­டோம். மக்களாட்சியின்­படி அதிமுகவை மீட்டு எடுப்­போம்," என்றார்.

ஜெ.ராதாகிருஷ்ணன் பணி மாற்றம்

சென்னை: மாநிலம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மருத்துவத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புச் செயலராக மாற்றப்பட்டுள்ள நிலையில், மருத்துவத்துறை முதன்மைச் செயலாளராக செந்தில்குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

'குழந்தைகளைப் பணியில் அமர்த்துவது சமூகக் குற்றம்'

சென்னை: குழந்தைகளைப் பணியில் அமா்த்தி, அவர்களது எதிர்காலத்தை பாழாக்குபவர்கள் குறித்து பொதுமக்கள் அரசுக்குத் தகவல் ெதரிவிக்கவேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளாா். குழந்தைப் பருவத்திலேயே அவர்கள் சம்பாதிக்கும் சொற்பத் தொகைக்காக ஆசைப்பட்டு, வேலைக்கு அனுப்பி அவர்களது பொன்னான எதிா்காலத்தை பாழ்படுத்துவது சமூகக் குற்றமாகும் எனவும் அவர் ெதரிவித்துள்ளார்.