சென்னை: மாநிலம் முழுவதும் கோடை விடுமுறைக்குப் பின்னர் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்த மாணவர்களை மேளதாளம் முழங்க ஆசிரியர்கள் இன்முகத்துடன் வரவேற்றனர்.
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் நேற்றுமுதல் தொடங்கியது. பள்ளிகளில் முதல் ஐந்து நாள்கள் நல்ெலாழுக்க வகுப்புகள் நடத்தப்படும் என்றும் மாணவர்களுக்கு 20 நாள்களுக்குள் பாடப் புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
எட்டாம் வகுப்பு வரை சேர முன்வரும் மாணவர்களிடம் 'டிசி' எனப்படும் மாற்றுச் சான்றிதழ் இல்லாவிட்டாலும் சேர்த்துக்கொள்ளும்படி பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

