சென்னை: மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சி யார் என்பதில் அதி முக, பாஜக, பாமக இடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது.
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி தாங்கள்தான் என பாஜகவும் பாமகவும் உரிமை கொண்டாடி வரும் சூழலில், அதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக, தாங்கள்தான் உண்மையான எதிர்க்கட்சி எனவும் வலியுறுத்திக் கூறியுள்ளது.
கடந்த ஓராண்டு காலமாகவே சட்டமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் சிறந்த எதிர்க்கட்சி யாக அதிமுக செயல்பட்டு வருவ தாகவும் இக்கட்சியின் ஒருங்கி ணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இப்போது சட்டப் பேரவையில் 66 எம்எல்ஏக்களுடன் அதிமுக வலுவான எதிர்க்கட்சியாக இருந்த போதிலும், மக்கள் முன்னிலையில் தாங்களே எதிர்க்கட்சியாக செயல் பட்டு வருவதாக அதன் தோழமைக் கட்சியான பாஜக கூறியுள்ளது.
மற்றொருபுறம், கடந்த சட்ட மன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமகவும் தாங்களே பிரதான எதிர்க்கட்சி என்று அறிவித்துள்ளது.
சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் எண்ணிக்கையில் மட்டுமே அதிமுக எதிர்க்கட்சியாக இருப்பதாகத் தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அரசாங்கத்தைச் செயல்பட வைத்து வெற்றிபெறுகிற கட்சி பாட்டாளி மக்கள்கட்சி மட்டும்தான் என்று கூறினார்.
இந்நிலையில், தோழமைக் கட்சிகளின் இந்த நிலைப்பாட்டை நிராகரித்து ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், சட்டப்பேரவையின் உள்ளேயும் வெளியேயும் சிறந்த எதிர்க்கட்சியாக அதிமுக செயலாற்றி வருவதாக சுட்டிக்காட்டி உள்ளார்.
எதிர்க்கட்சியின் செயல்பாடு களில் அதிமுக பின்தங்கி இருப்பது போன்ற மாயத்தோற்றம் அண் ைமக்காலமாக உருவாக்கப்பட்டு வருவதாகக் கண்டனம் தெரிவித் துள்ள அவர், மக்களின் குறைகளை மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்கு எடுத்துச்சென்று தீர்வு காணும் இயக்கமாக அதிமுக செயல்பட்டு வருவதாக சொன்னார்.
மக்களின் முக்கிய பிரச்சினைகள் குறித்து பலமுறை பிரதமருக்கும் மத்திய அமைச்சர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் பிரதான கட்சி யார் என்பது குறித்து மோதல் வெடித்துள்ள நிலையில், ஓ பன்னீர்செல்வத்தின் இவ்வறிக்கை அரசியல் அரங்கில் பரபரப்பை கூட்டியுள்ளதாக சன் தொலைக்காட்சி செய்தி குறிப்பிட்டுள்ளது.

