கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் 15 மாணவர்கள் மட்டுமே படித்து வரும் நிலையில், இந்தப் பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக் கையை அதிகரிக்கும் நோக்கில் பரிசுத்தொகை திட்டத்தை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் லட்சுமணசாமி அறிவித்துள்ளார்.
கோவை, மேட்டு லட்சுமிநாயக்கன்பாளையத்தில் 1952ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை 15 மாணவ-மாணவிகள் மட்டுமே தற்போது பயின்று வருகின்றனா்.
இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக லட்சுமணசாமியும், ஆசிரியராக வைரவபாண்டியும் பணியாற்றி வருகின்றனா்.
இந்நிலையில், தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவா்கள் எண்ணிக் கையை அதிகரிக்க ரூ.1,000 பரிசுத்தொகை திட்டத்தை லட்சுமணசாமி அறிவித்துள்ளார். 2022-2023ஆம் கல்வியாண்டில் சேரும் மாணவா்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.1,000 பரிசளிப்பதாக துண்டுப் பிரசுரம் விநியோகித்து வரும் இவர், மாணவா்கள் எவ்வளவு பேர் சோ்ந் தாலும் ரூ.1,000 வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

