ஒற்றைத் தலைமை முழக்கம்: அதிமுகவில் சலசலப்பு

ஒற்றைத் தலைமை முழக்கம்: அதிமுகவில் சலசலப்பு

1 mins read
e2187442-9022-4b4f-ab38-965b5e29e9b3
-

சென்னை: அதி­மு­க­வுக்கு ஒற்­றைத் தலைமை வேண்­டும் என்ற கோரிக்­கையை வலி­யு­றுத்தி, அக்­கட்­சி­யின் தலை­மை­ய­கம் முன்பு தொண்­டர்­கள் முழக்­கங்­கள் எழுப்­பி­ய­தால் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது.

அதி­முக பொதுக்­கு­ழுக் கூட்­டம் எதிர்­வ­ரும் 24ஆம் தேதி நடை­பெற உள்­ளது. அதில் 2,900க்கும் மேற்­பட்ட பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள் பங்­கேற்க உள்­ள­னர். இது தொடர்­பான ஆலோ­ச­னைக் கூட்­டம் சென்­னை­யில் நேற்று நடை­பெற்­றது.

அதில், பொதுக்­கு­ழு­வில் விவா­திக்­கப்­பட வேண்­டிய விஷ­யங்­கள், சசி­கலா விவ­கா­ரம், யார் யார் பேசு­வது என்­பது குறித்­தெல்­லாம் ஆலோ­சிக்­கப்­பட்­ட­தா­கத் தெரி­கிறது. குறிப்­பாக, சசி­க­லா­வின் ஆத­ர­வா­ளர்­களும் கடந்த சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில் போட்­டி­யிட வாய்ப்பு கிடைக்­கா­த­வர்­களும் தேர்­தல் தோல்வி குறித்து கேள்­வி­கள் எழுப்­பி­னால் அவற்றை எவ்­வாறு எதிர்­கொள்­வது என்­பது குறித்து விவா­திக்­க­பட்­ட­தா­க­வும் கூறப்­படுகிறது.

பொதுக்­குழு கூட்­டத்­தில் பங்­கேற்­கும் அனை­வ­ருக்­கும் புகைப்­ப­டத்­து­டன் கூடிய அடை­யாள அட்டை வழங்­கு­வது என இக்­கூட்­டத்­தில் முடிவு எடுக்­கப்­பட்­ட­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இந்­நி­லை­யில், ஆலோ­ச­னைக் கூட்­டம் நடை­பெற்­றுக் கொண்­டி­ருந்­த­போது, அதி­முக தலை­மை­ய­கத்­துக்கு வெளியே, திர­ளாக கூடிய தொண்­டர்­கள் பலர் கட்­சிக்கு ஒற்­றைத்­த­லைமை வேண்­டும் என வலி­யு­றுத்தி முழக்­கங்­களை எழுப்­பி­னர். பின்­னர் சிறிது நேரத்­தில் அவர்­கள் எடப்­பாடி பழ­னி­சாமி, ஓ.பன்­னீர்­செல்­வம் ஆத­ர­வா­ளர்­கள் என இரண்­டா­கப் பிரிந்து முழக்­கங்­க­ளைத் தொடர்ந்­த­னர். கட்­சித் தலை­மை­ய­கத்­துக்கு வெளியே இரு­த­ரப்­பி­ன­ருக்­கும் உள்ள கோஷ்டி மோதலை பகி­ரங்­க­மாக வெளிப்­படுத்­தும் வகை­யில் முழக்­கங்­கள் எழுப்­பப்­பட்­டது பர­பரப்பை ஏற்­ப­டுத்­தி­யது.