நீதிபதி: அனைத்துத் தரப்பினரும் சமமானவர்கள்

நீதிபதி: அனைத்துத் தரப்பினரும் சமமானவர்கள்

1 mins read
0bc7870e-2eae-42f1-b96a-e794c4aa6637
-

சென்னை: எந்­த­வொரு சமூ­கத்தைப் பற்­றி­யும் தவ­றாகப் பேச ஒரு­போதும் அனு­ம­திக்­கப்­ப­டக் கூடாது என்று சென்னை உயர் நீதி­மன்ற நீதி­பதி டி.பரத சக்­ர­வர்த்தி தெரி­வித்­துள்ளார்.

இந்­தி­யா­வில் அனைத்து தரப்பு மக்­களும் சம­மா­ன­வர்­கள்­தான் என்றும் அவ­தூறு வழக்கு ஒன்றை விசா­ரித்­த­போது அவர் குறிப்­பிட்­டார்.

நடிகை மீரா மிதுன் பட்­டி­ய­லினத்­த­வர்­கள் குறித்து அவ­தூறா­கப் பேசி சமூக ஊட­கங்­களில் காணொ­ளிப்­ப­திவு ஒன்றை வெளி­யிட்­ட­தாக எழுந்த புகா­ரின் பேரில் அவர் மீதும் அவ­ரது நண்­பர் சாம் அபி­ஷேக் என்­ப­வர் மீதும் வன்­கொ­டுமை தடுப்­புச் சட்­டத்­தின் கீழ் வழக்­குப் பதி­வா­னது.

பின்­னர் கடந்த ஆண்டு இருவரும் கைது செய்­யப்­பட்­ட­னர்.

இந்த வழக்­கில் இருந்து தன்னை விடு­விக்­கக் கோரி சாம் அபி­ஷேக் தாக்­கல் செய்த மனு மீதான விசா­ரணை நேற்று முன்­தி­னம் நடை­பெற்­றது.

இரு­த­ரப்பு வாதங்­க­ளை­யும் செவி­ம­டுத்த நீதி­பதி, நாட்­டில் உள்ள அனைத்­துத் தரப்பு மக்களும் சம­மா­ன­வர்­கள் என்­பதை மறந்­து­வி­டக்­கூ­டாது என்­றார்.