தமிழ் வழி கல்விக்கான 20% இட ஒதுக்கீட்டை எதிர்த்த மனு தள்ளுபடி

தமிழ் வழி கல்விக்கான 20% இட ஒதுக்கீட்டை எதிர்த்த மனு தள்ளுபடி

1 mins read
7b09f38c-7897-48ee-8955-f477a09016c7
-

சென்னை: தமிழ் வழி­யில் படித்­த­வர்­க­ளுக்கு அரசு வேலை­வாய்ப்பில் 20 விழுக்­காடு இட­ஒ­துக்­கீடு அளிக்­கும் சட்­டத் திருத்­தத்தை எதிர்த்து தாக்­கல் செய்­யப்­பட்ட மனுவை சென்னை உயர் நீதி­மன்­றம் தள்ளு­படி செய்து உத்­த­ர­விட்­டது.

சென்னை புழல் சிறை­யில் உதவி சிறை அதி­கா­ரி­யா­கப் பணி­யாற்றி வரும் ஷாலினி இந்த மனு­வைத் தாக்­கல் செய்­தி­ருந்­தார். ஷாலினி நீல­கி­ரி­யைச் சேர்ந்­த­வர்.

அங்­குள்ள பள்­ளி­யில் பத்­தாம் வகுப்பு வரை தமிழ் வழி­யில் படித்­துள்­ளார். எனி­னும், அவர் வசித்த பகு­தி­யில் மேல்­நிலை வகுப்­பு­கள் இல்லை. அத­னால் நீல­கிரி மாவட்­டம் அருகே உள்ள கேர­ளா­வில் பள்­ளி­யில் ஆங்­கில வழி­யில் 11, 12ஆம் வகுப்­பு­க­ளைப் படித்து முடித்­தார்.

பின்­னர் தமிழ் வழி­யில் படித்­த­தற்­கான இட ஒதுக்­கீட்­டின் அடிப்­ப­டை­யில், இவ­ருக்கு சிறைத்­துறை அதி­கா­ரி­யாக வேலை கிடைத்­துள்­ளது.

இந்­நி­லை­யில், அடுத்த கட்­ட­மாக தமி­ழக அர­சின் 'குரூப்-2' தேர்வு எழுத தயா­ரான ஷாலினி, அதற்­காக விண்­ணப்­பித்­த­போது, தமி­ழக அர­சின் புதிய சட்­டத்­தி­ருத்­தத்­தின்­படி, அனைத்து வகுப்­பு­க­ளி­லும் தமிழ் வழி­யில் பயின்­ற­தற்­கான சான்­றி­தழை அளிக்­கு­மாறு அறி­வு­றுத்­தப்­பட்­டது.

இதை­ய­டுத்து, அவர் உயர் நீதி­மன்­றத்தை அணு­கி­னார். புதிய சட்­டத்­தி­ருத்­தத்­தால் தமது அடிப்­படை உரிமை பாதிக்­கப்­ப­டு­வ­தாக அவர் தமது மனு­வில் குறிப்­பிட்­டி­ருந்­தார்.இதற்கு அர­சுத் தரப்­பில் கடும் எதிர்ப்பு தெரி­விக்­கப்­பட்­டது.

மேலும், மதுரை உயர் நீதி­மன்றக் கிளை இதே கோரிக்­கையு­டன் தொடுக்­கப்­பட்ட வழக்கை ஏற்­கெனவே தள்­ளு­படி செய்­ததைச் சுட்­டிக்காட்டியது.

இதை­ய­டுத்து, ஷாலி­னி­யின் மனுவை தள்­ளு­படி செய்­வ­தாக உயர் நீதி­மன்ற அமர்வு தெரி­வித்­துள்­ளது.