தூத்துக்குடி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து தனியார் ஆம்னி பேருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் செவ்வாய்க்கிழமை இரவு சென்னைக்கு சென்றுகொண்டிருந்தது.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே வந்தபோது ஆம்னி பேருந்தின் முன்பக்க டயர் வெடித்ததில் திடீரென நிலை குலைந்த பேருந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் உள்பட 30 பேர் படுகாயம் அைடந்தனர்.
கயத்தாறு காவலர்கள் அனை வரையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
நாகர்கோவிலைச் சேர்ந்த புதுமாப்பிள்ளையான சிவராம், 30, நாகர்கோவிலைச் சேர்ந்த ஜான்சன், 50, ராஜபாளையத்தைச் சேர்ந்த ஓட்டுநர் பாண்டி செல்வன் ஆகிய மூவரும் சிகிக்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுகுறித்து கயத்தாறு காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

