சென்னை: வெளிநாட்டுப் பயணி கள் கொண்டு வரும் தங்கம், வெள்ளி உள்ளிட்ட நகைகளின் மதிப்பு 50,000 ரூபாய்க்கும் மேல் இருந்தால், அதற்கு அவர்கள் சுங்கவரி செலுத்தவேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சரவணன் தீர்ப்பில் கூறியுள்ளார்.
அத்துடன், ரூ.50,000 மதிப்பிற்கும் அதிகமான தங்கம் உள்ளிட்ட பொருள்களை இந்தியாவிற்குள் கொண்டு வரும்போது அதற்கான உறுதிமொழியையும் சம்பந்தப்பட்ட வர்கள் சுங்கத்துறையிடம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தர வில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த சந்திர சேகரம், விஜயசுந்தரம், அவரின் மனைவி, குழந்தை உள்ளிட்ட நால்வர் சென்னைக்கு வந்தனர்.
ஆன்மிகச் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு இந்தியாவுக்கு வந்த இவர்கள் 1,594 கிராம் கொண்ட ரூ. 43 லட்சத்து 90 ஆயிரத்து 754 மதிப்பிலான தங்க நகைகளை அணிந்துகொண்டும் 112 வெளி நாட்டு மதுபானப் போத்தல்களை எடுத்துக்கொண்டும் வந்துள்ளனர்.
இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களுக்கு அபரா தம் விதித்த நிலையில், இதனை எதிர்த்து சந்திரசேகரம், விஜய சுந்தரம், அவரின் மனைவி ஆகிய மூவரும் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இம்மனு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பாக முன்னிலையான வழக்கறிஞர், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருள்களைக் கொண்டுவந்தால், அதற்கு சுங்கவரி செலுத்தத் தேவையில்லை என 2014ஆம் ஆண்டு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் அதன்படி தங்களுக்கு விலக்கு அளித்து அபராதத்தை ரத்து செய்யவேண்டும் எனவும் வாதிட்டார்.
ஆனால், மனுதாரர் தரப்பு வாதங்களை ஏற்க மறுத்துவிட்ட நீதிபதி சரவணன், 2016ஆம் ஆண்டு புதிய விதிகள் கொண்டு வரப்பட்டதாகவும் அதன்படி வெளிநாடுகளிலிருந்து வரும் நபர்கள் தங்கம், வெள்ளி உள்ளிட்ட நகைகளின் மதிப்பு ரூ.50,000க்கு மேல் இருந்தால் அதற்கு சுங்கவரி செலுத்தவேண்டும் என்றும் தெரிவித்தார்.
ஆன்மீகச் சுற்றுலாவுக்காக ஒருவர் இந்தியாவுக்கு வரும்போது இவ்வளவு நகைகளையும் மதுபோத்தல்களையும் ெகாண்டு வந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் நீதிபதி கூறினார். இந்த அளவுக்கு எடுத்து வருவது வணிகரீதியாக இருக்கலாம் அல்லது அன்பளிப்பாக மற்றவர்களுக்கு அளிக்கலாம் எனவும் நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

