எம்ஜிஎம் குழுமத்தின் நாற்பது இடங்களில் திடீர் சோதனை

எம்ஜிஎம் குழுமத்தின் நாற்பது இடங்களில் திடீர் சோதனை

2 mins read
797be624-f349-4024-acda-652a4476da89
சென்னையின் கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ளது எம்ஜிஎம் டிஸ்ஸிவேல்ட் பொழுது போக்கு பூங்கா. எம்ஜிஎம் நிறுவனத்தின் கீழ் இயங்கும் இப்பூங்கா, நட்சத்திர விடுதிகள், மதுபானத் தயாரிப்பு தொழிற்சாலை, மருத்துவமனைகளிலும் சோதனைகள் நடந்ததாக தகவல். படம்: ஊடகம் -

சென்னை: தமி­ழ­கம் முழு­வ­தும் எம்­ஜி­எம் குழு­மத்­துக்­குச் சொந்த மான நாற்­ப­துக்­கும் மேற்­பட்ட இடங்­களில் வரு­மான வரித்­துறை அதி­கா­ரி­கள் நேற்­று­க்காலை முதல் திடீர் சோதனையில் இறங்கி­னர்.

இச்­சோ­தனை குறித்து வெளி யான முதற்­கட்ட தக­வ­லின்­படி, குழு­மத்­தின் மீதான வரி ஏய்ப்பு புகார் கார­ண­மாக இந்நட­வடிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கக் கூறப்­படுகிறது.

தமி­ழ­கத்­தில் சென்னை, திண்டி­வ­னம், காஞ்­சி­பு­ரம், நெல்லை உள்­ளிட்ட மாவட்­டங்­க­ளி­லும் ஆந்­திரா, கர்­நா­டகா ஆகிய மாநி­லங்­ க­ளி­லும் எம்­ஜி­எம் குழுமத்­துக்­குச் சொந்­த­மான நாற்பதுக்­கும் மேலான இடங்­களில் ஒரே நேரத்­தில் வரு­மான வரித்­துறை அதி­கா­ரி­கள் சோத­னை­யில் ஈடு­பட்­ட­னர்.

சாந்­தோம் பகு­தி­யில் வசித்து வரும் எம்­ஜி­எம் குழு­மத் தலை­வ­ரான எம்­ஜி­எம் மாறன் எனும் நேச­மணி மாறன் முத்­து­வின் வீட்­டி­லும் சோதனை நடத்­து­வ­தற்­காக அதி காரி­கள் வந்­தி­ருந்­த­னர்.

ஆனால், மாறன் வெளி­நாட்­டில் தங்கி இருப்­ப­தாக அதி­கா­ரி­களுக் குத் தக­வல் கிடைத்­தது.

பூட்­டிக் கிடக்­கும் வீட்­டின் சாவி தங்­க­ளி­டம் இல்லை என காவ லாளி­களும் கூறி­விட்­ட­னர்.

இந்­நி­லை­யில், வீட்­டுக்­குள் செல்ல சாவி இல்­லா­தால் நீண்ட நேர­மாக கார்களி­லேயே அமர்ந்தி­ருந்த அதி­கா­ரி­கள், வீட்­டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதிக்க வும் திட்­ட­மிட்டு உள்ளதாக தக­வல்­கள் கூறின.

சென்னை மயி­லாப்­பூர் ராதா கிருஷ்­ணன் சாலை­யில் இயங்கி வரும் எம்­ஜி­எம் குழு­மத்­தின் தலைமை அலு­வ­ல­கத்­தில் மட்­டும் பத்­துக்­கும் மேலான வரு­மா­னத் துறை அதி­கா­ரி­கள் சோதனை நடத்­தி­னர்.

காவ­லர்­க­ளின் பாது­காப்­பு­டன் நடந்து வரும் இந்தச் சோதனை குறித்த கூடுதல் விவ­ரங்­கள் சோத னைக்­குப் பின்னர் தெரி­விக்­கப்­படும் என்று வரு­மான வரித்­துறை அதி­கா­ரி­கள் கூறி­யுள்­ள­னர்.

சென்னை மக்களின் பொழுது போக்குத் தளங்களில் மிகவும் முக் கியமான ஒன்றாக விளங்கும் எம்ஜிஎம் டிஸ்ஸிவேல்ட் பொழுது போக்கு பூங்கா, நட்சத்திர விடுதி கள், மதுபானத் தயாரிப்பு தொழிற் சாலை உள்ளிட்ட இடங்களிலும் சோதனைகள் தொடர்ந்தன.