கடற்கரை மணலில் புதைந்து கிடந்த சாமி சிலைகள் மீட்பு

கடற்கரை மணலில் புதைந்து கிடந்த சாமி சிலைகள் மீட்பு

1 mins read
4ae2a210-ef89-497e-8810-05c8cdd93179
பஞ்சமுக ஆஞ்சநேயர், யோக நிலையில் இருக்கும் சித்தர் ஆகிய இவ்விரு சிலைகளும் கடற்கரை மணலில் புதைந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டன. படம்: தமிழக ஊடகம் -

பட்டினப்பாக்கம்: சென்னை பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் கடற்கரை மணலில் இரு சாமி சிலைகள் புதைந்திருந்த நிலை யில், அதன் ஒரு சில பாகங்கள் மட்டும் வெளியே தென்பட்டன.

கடற்கரையில் காற்று வாங்க வந்த பொதுமக்கள் இதுகுறித்து பட்டினப்பாக்கம் காவல்துறைக்கு விவரம் தெரிவிக்க, பட்டினப் பாக்கம் காவல் ஆணையர் ராஜேஸ்வரி காவலர்களுடன் வந்து சிலைகளை மீட்டார்.

சிலைகளில் ஒன்று பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை என்றும் மற்றொன்று தியானம் செய்யும் சித்தரின் சிலையைப் போல் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் கடந்த சில மாதங் களுக்கு முன்பு பட்டினப்பாக்கம் கடற்கரை மணல் பகுதியில் புதைந்த நிலையில் சில சாமி சிலைகள் மீட்கப்பட்டன.

இந்தச் சிலையின் தொன்மை குறித்து தொல்லியல் துறை அதி காரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் இச்சிலைகள் மயிலாப்பூர் தாசில்தாரிடம் ஒப்ப டைக்கப்படும் என்றும் காவலர்கள் தெரிவித்தனர்.