சென்னை: அதிமுகவில் உட்கட்சி மோதல் அதிகரித்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் தனித்தனி யாக தங்களது ஆதரவாளர் களுடன் நேற்று ஆலோசித்தனர். இருவரில் ஒருவரை தலைமைப் பதவிக்கு தேர்ந்தெடுக்க பேச்சுவார்த்தை நடப்பதாக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. பன்னீர் செல்வத்துக்கு ஆதரவான சுவரொட்டிகள் கிழிக்கப்பட்ட தால் அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

