ஆணவக் கொலை செய்த இருவருக்கு சிறை

ஆணவக் கொலை செய்த இருவருக்கு சிறை

1 mins read
ea9288e2-b911-4431-8b04-e58f171281be
-

தஞ்­சா­வூர்: சாதி மாற்றி திரு­ம­ணம் செய்­து­கொண்ட ஒரு காதல் தம்­ப­தியை தங்­க­ளது வீட்­டுக்கு வர­வேற்று, அவர்­களை வெட்­டிக் கொன்ற பெண்­ணின் அண்­ணன் உள்­பட இரு­வர் கைது செய்­யப்­பட்டு திருச்சி மத்­திய சிறை­யில் அடைக்­கப்­பட்­ட­னர்.

"சாதி மாறி காதல் திரு­ம­ணம் செய்­ப­வர்­க­ளைக் கொலை செய்­வ­து­தான் கௌர­வமா?" என இச்­சம்­ப­வத்­திற்கு மக்­கள் நீதி மய்­யம் கட்­சித் தலை­வர் கமல் ஹாசன் கண்­ட­னம் தெரி­வித்து உள்­ளார்.

தஞ்­சா­வூர் மாவட்­டம், கும்ப கோணம் அருகே உள்ள துலுக்க வேலி பகு­தி­யைச் சேர்ந்த சரண்யா வும், 24, திரு­வண்­ணா­மலை மாவட்­டம், பொன்­னுா­ரைச் சேர்ந்த மோகன், 31, என்­ப­வ­ரும் காத­லித்து உள்­ள­னர். இவர்­கள் வெவ்­வேறு சமூ­கத்­தி­னர் என்­ப­தால் பெண் வீட்­டார் அவர்­க­ளது காதலை ஏற்கவில்லை. இத­னால், கடந்­த­வா­ரம் அவர்­கள் சென்­னை­யில் திருமணம் செய்­து­கொண்­ட­னர். இந்­நி­லை­யில், விருந்து வைப்­ப­தா­கக் கூறி மண­மக்­களை துலுக்­க­வே­லிக்கு வர­வ­ழைத்த சரண்­யா­வின் அண்­ணன் சக்­தி­வேல், உற­வி­னர் ரஞ்­சித் ஆகி­யோர் நேற்று முன்தினம் தம்­ப­தியை வெட்­டிக் கொன்­ற­னர்.