செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
b6c25b05-dc55-4f80-9164-779f09006bb4
-

கோவை-ஷீரடி சிறப்பு ரயில்

கோவை: பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ் வாரம் ஒருமுறை புதனன்று மாலை கோவையில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியிலுள்ள சாய்பாபா கோவிலுக்குச் சென்று திரும்பும் தனியார் சிறப்பு ரயில் நேற்று புறப்பட்டது. சேலம் கோட்ட மேலாளர் கௌதம் சீனிவாஸ், திரைப்பட இயக்குநர் சேரன் உள்ளிட்டோர் ரயிலை கொடி அசைத்து துவக்கி வைத்தனர். வழியில் திருப்பூர், ஈரோடு, சேலம், பெங்களூரு மந்த்ராலயம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் இருந்து ஷீரடிக்குச் சென்று மீண்டும் கோவைக்கு ஐந்து நாள்கள் பயணமாக வர அதிகபட்ச கட்டணமாக 13,000 ரூபாயும் குறைந்தபட்ச கட்டணமாக 2,500 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

காவல்துைறக்கு எச்சரிக்கை

சென்ைன: காவல்துறை மீதான குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருவதை பொறுத்துக்கொள்ள முடியாது என எச்சரித்துள்ள உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், அண்மைக்காலமாக காவல் உயர் அதிகாரிகளுக்கு எதிராக சுமத்தப்படும் மோசமான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என வேதனை தெரிவித்துள்ளார். காவல்துறையினரின் அதிகார அத்துமீறல் குறித்து அரசு இதுவரை எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

மருத்துவமனையில் விஜயகாந்த்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்காக அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிகிச்சை முடிந்து ஓரிரு நாள்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

டிடிவி தினகரன்: அதிமுகவில் முதலீட்டைப் பொறுத்துதான் பதவி

நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், "அதிமுகவில் முதலீட்டைப் பொறுத்துதான் பதவி கிடைக்கும் என்றார். அதிமுக என்பது ஒரு கட்சியாக நடக்கவில்லை. அது ஒரு வியாபார நிறுவனமாக நடக்கிறது. யாரு அங்கு முதலீடு அதிகமாக செய்கிறார்களோ அவர்களுக்குத் தான் அங்கு வாய்ப்பு கிடைக்கும். என்னைப் பொறுத்தவரைக்கும் அது ஒரு நிறுவனம். அதைப்பற்றி பேசி நேரத்தை வீடிணடிக்க விரும்பவில்லை," என்று தெரிவித்துள்ளார்.

61 நாளுக்குப் பிறகு மீன்பிடிக்கச்

சென்ற தமிழக, புதுவை மீனவர்கள்

கடலுார்: இந்த ஆண்டின் மீன்பிடித் தடைக்காலம் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்த நிலையில், தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் 61 நாள்களுக்குப் பிறகு நேற்று அதிகாலை முதல் மீண்டும் மின்பிடிக்கச் சென்றனர்.

கடலுார் மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்கப் புறப்படுவதற்கு முன்னதாக பட்டாசுகள் வெடித்து உற்சாகத்தோடு சென்றனர். கடலில் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரையில், 61 நாள்கள் மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, டீசல் விலை உயர்வால் சென்னையில் 25 விழுக்காடு படகுகளே கடலுக்குச் சென்றதாக விசைப்படகு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.