கோயில்கள் சார்பில் இனி மாற்றுத்திறனாளி மணமக்களுக்குப் புத்தாடை

கோயில்கள் சார்பில் இனி மாற்றுத்திறனாளி மணமக்களுக்குப் புத்தாடை

1 mins read
7a8ded4d-a0a8-4417-8a60-2b88e1044b26
-

தமிழக திருக்கோயில்களில் திருமணம் செய்துகொள்ளும் மாற்றுத்திறனாளி மணமக்களுக்கு இனி திருக்கோயில் சார்பில் புத்தாடைகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மணமக்களில் ஒருவர் மாற்றுத் திறனாளியாக இருந்தாலும்கூட கோயில் மண்டபங்களில் இவர்களது திருமணங்களை வாடகையின்றி நடத்த அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில், இனி வருங்காலங்களில் திருமணம் செய்துகொள்ளும் மாற்றுத்திறனாளி மணமக்களுக்கு திருக்கோயில் சார்பாக புத்தாடைகளையும் வழங்கவேண்டும் என கோயில் நிர்வாகத்துக்கு இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், தமிழகத்தில் உள்ள 48 முதுநிலைத் திருக்கோயில்களில் முதியோா்கள், மாற்றுத்திறனாளிகள் சுவாமி தரிசனம் செய்வதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

படம்: தமிழக ஊடகம்